பாண்டியன் ஸ்டோர்ஸ்: அரசியிடம் மீண்டும் பேசிய குமார்! சரவணன் சேர்த்து சம்பவம்! கோபத்தில் ராஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் இன்றைய எபிசோடில், ராஜியின் கனவும், சரவணன் மற்றும் குமாருக்கு இடையில் நடந்த மோதலும், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியிடம் பேச வேண்டும் என்று குமார் முயற்சி செய்கிறார். ஆனால் அங்கு வந்த சரவணன் குமாரை அடிக்கப் போகிறார். அதற்கு அரசி என்ன சொன்னார் என்பது பற்றி இன்றைய எபிசோடில் விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores Vijay TV

சரவணன் - குமார் மோதல்

எபிசோடின் தொடக்கத்தில், அரசி சாலையில் நடந்து வரும்போது குமாரைச் சந்திக்கிறார். குமார், அரசியைப் பின்தொடர்ந்து சென்று, "என்னை மன்னித்துவிடு" என்று கேட்கிறார். அதற்கு அரசி கோபப்பட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் குமார் நான் முன்பு போல இல்ல இப்போ திருந்திட்டேன். உன்ன தெரியாம அவ்வளவு கொடுமைப்படுத்திட்டேன். உன்னோட அருமை எனக்கு அப்போ புரியல இப்பதான் தெரியுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் சரவணன், குமாரைப் பார்த்து, "என்ன செய்கிறாய்?" என்று கோபமாகக் கேட்கிறார். "சும்மா பேசத்தான் வந்தேன்" என்று குமார் பதில் சொல்ல, சரவணன் கோபத்துடன், "என் தங்கச்சியிடம் உனக்கு என்ன பேச இருக்கு?" என்று கேட்கிறார்.

பின்னர், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதைக் கண்ட அரசி, "அண்ணா இப்படி எல்லாம் பண்ணாதே" என்று கெஞ்சுகிறார். ஆனாலும் சரவணன் குமாரை அடிக்கப் போகிறார். உனக்கு ஏற்கனவே வாங்குன அடிக்கு போதாதா? போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்தும் நீ திருந்தலையா? என் தங்கச்சிக்காக நாங்க அண்ணன்கள் மூன்று பேர் இருக்கிறோம் என்று திட்டிக் கொண்டிருக்கும் போது அரசி சரவணனை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகிறார்.

ராஜியின் கனவுக்குத் தடையாக நிற்கும் குடும்பம்

இதற்கிடையே, ராஜி மீண்டும் டான்ஸ் போட்டியில் கலந்துகொள்ள, கதிரிடம் சம்மதம் கேட்கிறார். இதைக் கேட்ட பழனி, "சென்னைக்கு போய் கலந்துகொள்ளப் போகிறாயா?" என்று கேட்கிறார். அப்போது அங்கு வரும் கோமதி, "நாங்கள் உன்னை போக வேண்டாம் என்றுதானே சொன்னோம், பிறகு ஏன் இதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கேட்கிறார். கதிரும், "இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம்" என்று சொல்கிறார். இதனால், மனம் உடைந்த ராஜி, "போட்டியில் கலந்துகொள்ளச் சம்மதம் தந்தால் தான் சாப்பிடுவேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

அடுத்ததாக கதிர் ராஜேஷ் சமாதானம் செய்வதற்காக இரவு வாக்கிங் போகலாம் என்று கூட்டிக்கொண்டு போகிறார் அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டைதான் வருகிறது. பின்னர், ராஜி பாண்டியனிடம் சென்று, "போட்டியில் கலந்துகொள்ளச் சம்மதம் சொல்லுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால், பாண்டியன், "வீட்டில் யாருக்குமே இதில் விருப்பமில்லை. இதையும் மீறி நீ போகிறதாக இருந்தால், தாராளமாகப் போகலாம்" என்று கூறுகிறார். பின்னர், ராஜி கதிரிடம், "நீ இந்தப் போட்டியில் கலந்துகொண்டு காசு கொண்டு வந்தாலும், நான் வாங்க மாட்டேன்" என்று கதிர் கண்டிப்புடன் கூறுகிறார்.

இப்படியாக, ராஜியின் டான்ஸ் போட்டி கனவு, குடும்பத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. ராஜி தனது கனவை நிறைவேற்றுவாரா? அல்லது குடும்பத்திற்காக அதை விட்டுக்கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+