பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் நடந்த சண்டை.. சரவணன் கூட இப்படி பண்ணிட்டாரு! ஹேமா உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial )பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். அப்போது சூட்டிங்கின் போது நடந்த சண்டை பற்றியும் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்த பிறகு அதில் நடித்த ஒரு சிலர் மட்டும் இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் மயில் மற்றும் சரவணன் விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.

அடுத்த சம்பவம்
மறுபக்கத்தில் ஐபிஎஸ் ஆகப் போகிறேன் என்று அதற்கு தயாராகிக் கொண்டிருந்த ராஜியும் கதிரும் இப்போது ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் மீனா தங்கமயிலுக்கு உதவி செய்வதை பார்த்து செந்தில் கோபத்தில் இருக்கிறார். தங்கமயில் தற்கொலை செய்யப் போனதையும் அவரை வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததையும் மீனா பாண்டியன் வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
யாருக்கு குழந்தை
இதற்கிடையில் மீனாவிற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வருகிறது. இதனால் முதல் சீசனை போலவே இப்போதும் ஒரே வீட்டிற்குள் எல்லோரும் கர்ப்பமாக இருப்பது போன்று கதை வைக்க போகிறார்களா? அல்லது தங்கமயில் மற்றும் சரவணன் இருவருடைய விவாகரத்து வழக்கை வைத்து இழுக்க போகிறார்களா என்று தெரியவில்லை.
அடுத்த கதை என்ன
ஏற்கனவே சரவணனின் முன்னாள் காதலி வேற இப்போது வந்திருக்கிறார். அவரும் விவாகரத்து வாங்கி விட்டு வந்திருப்பதால் மீண்டும் சரவணனும் அவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்ற கேள்விகளும் ரசிகர்களுக்கு இருக்கிறது. இப்படி கதை அங்கே இங்கே சுற்றிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி ஹேமா அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருவார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
அப்படி நேற்று வெளியிட்ட வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை பற்றியும் சொல்லி இருக்கிறார். நான் சரவணனுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று நினைக்கவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்ன சண்டை வந்துவிட்டது. அதில் சரவணன் ரொம்ப கோபப்பட்டு எல்லாரையும் திட்டிவிட்டார். அதனால் கொஞ்ச நேரம் சூட்டிங் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை
பிறகு இன்னைக்கு எனக்கும் சரவணனுக்கு மட்டும்தான் ஷூட்டிங் இருக்கிறது. அதற்காக நான் வந்திருக்கிறேன் எனக்கும் அவருக்கும் கோவிலில் ஷூட்டிங் வைத்திருக்கிறார்கள். அதற்காக வந்த இடத்தில் தான் இங்கே ஒரு பிரச்சனை வந்துவிட்டது. இப்போது அதை முடித்துவிட்டு நாங்கள் ஷூட்டிங் எடுத்திருக்கிறோம் என்று சூட்டிங் காட்சிகளை காட்டி இருந்தார். ஆனால் என்ன காட்சி எடுத்தது என்பதை சொல்லவில்லை.
புது படத்தில் ஹீரோவாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்.. உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்! குவியும் வாழ்த்து
இப்போதுதான் அவர் எதை சொன்னார் என்று தெரிகிறது. அதாவது தற்போது வந்த புரோமோவில் சரவணனும் அவருடைய முன்னாள் காதலி அஞ்சலியும் கோவிலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோவிலுக்கு வந்த மீனா அதை பார்த்து விடுகிறார். இதை புரோமோவில் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த காட்சி ஷூட்டிங் எடுக்கப்படும் போது தான் அங்கே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன சண்டை என்பதை பற்றி ஹேமா சொல்லவில்லை. ஆனாலும் சூட்டிங் ஸ்பாட்டில் ஏதோ ஒரு குழப்பம் நடந்தது என்பது மட்டும் தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications