பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோர்ட்டில் அரசி எடுத்த முடிவு! கண்ணீரில் குடும்பம்! கோபத்தில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த நீதிமன்றக் காட்சி, இன்றைய எபிசோடில் வெளியானது. அரசி தொடர்ந்த கடத்தல் வழக்கில், குமரவேலுக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அரசி வழக்கை வாபஸ் பெறுவாரா என்ற கேள்விக்கான விடை, இந்த எபிசோடில் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது.

நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்
இன்றைய எபிசோடில், அரசி மற்றும் குமரவேல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குமரவேல் அரசியைக் கடத்தியதாக அரசி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அதற்கு, குமரவேல் தரப்பு வழக்கறிஞர், "கடத்தப்பட்ட ஒரு பெண், கடத்தியவனுடன் கொஞ்ச நாட்கள் வாழ்வது சாத்தியமா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அரசி தரப்பு வழக்கறிஞர், "அரசி குமரவேலின் வீட்டில் வாழ்ந்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. குமரவேல் கடத்தியதற்கும், அரசி அவரது வீட்டில் வாழ்ந்ததற்கும் ஒரே காரணம், அவர்கள் இருவரும் காதலித்ததுதான். ஆனால், அந்த காதல் உண்மை இல்லை. குமரவேல் அரசியை மிரட்டியதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்" என்று ஆவேசமாக வாதாடினார்.
குமரவேலின் ஒப்புதல் வாக்குமூலம்
குற்றத்தை ஒப்புக்கொண்டு குமரவேல், "அரசி தரப்பு சொல்வது எல்லாம் உண்மைதான். நான் தவறு செய்துவிட்டேன். அதற்கு என்ன தண்டனையோ அதை அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார். இதைக் கேட்ட குமரவேல் தரப்பு வழக்கறிஞர், "என் கட்சிக்காரர் பயத்தில் இப்படிப் பேசுகிறார். அவருடைய பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று சொல்லி, மேலும் சாட்சிகளைச் சமர்ப்பிக்க அவகாசம் கேட்டார்.
ஆனால், நீதிபதி, "குற்றம் சாட்டப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, வேறு என்ன சாட்சிகள் வேண்டும்?" என்று சரமாரியாகக் கேள்வி கேட்டார். இந்தத் தருணத்தில், அரசிதான் இந்த வழக்கின் போக்கை மாற்றியுள்ளார்.
அரசியின் நெகிழ்ச்சியான முடிவு
நீதிபதி அரசியிடம், "உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்க, அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் அரசி ஒரு முடிவை அறிவித்தார். "இந்த வழக்கை நான் வாபஸ் வாங்க விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது, அரசியும் பாண்டியனும் பேசிக்கொண்ட ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி காட்டப்பட்டது.
அதில், அரசி தனது அப்பாவிடம், "குமரவேல் செய்தது மன்னிக்க முடியாத தவறுதான். அவன் மீது எனக்கு எந்தப் பரிதாபமும் இல்லை. ஆனால், அவன் செய்த தவறுக்காக, அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் தண்டனையை அனுபவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வீட்டில் இருந்த நாட்கள், அம்மாச்சி, பெரிய மாமா, அத்தை என்று எல்லோருமே என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். நீங்கள் என்னை எப்படிப் பார்த்துக் கொள்வீர்களோ, அதே போல்தான் அவர்களும் என்னை நடத்தினார்கள். அந்த குடும்பமும் நல்லவர்கள்தான். ஒருவேளை குமரவேல் சிறைக்குச் சென்றால், நம் இரண்டு குடும்பங்களும் ஒன்று சேராமல் போய்விடும். அம்மாச்சியின் அன்பிற்காக நாம் இந்த வழக்கை வாபஸ் பெற்றுவிடலாம்" என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
தீர்ப்பும், அடுத்த வாரத் திருப்பமும்
மீண்டும் நீதிமன்றக் காட்சிக்குத் திரும்பிய அரசி, "தப்பு செய்தவரே அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது. அதனால், அவருக்குத் தண்டனை வாங்கித் தர நான் விரும்பவில்லை. இந்த வழக்கில் இரு குடும்பங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களை வருத்தப்பட வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு நடந்தது பெரிய துயரம் தான். ஆனால், அவன் சிறைக்குச் சென்றால், அதைவிடப் பெரிய துயரத்தை அவனது குடும்பம் அனுபவிக்கும். அதையெல்லாம் மனதில் வைத்து இந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன்" என்று கூறினார்.
அரசியின் பேச்சைக் கேட்ட குமரவேல், சக்திவேல், மற்றும் கோமதி ஆகியோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பாண்டியன் அமைதியாக இருக்க, சரவணனும், கதிரும் மட்டும் ஆத்திரமடைந்தனர். அரசி எடுத்த இந்த முடிவு, சீரியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications