பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிர் வாழ்க்கையில் மீண்டும் வந்த முன்னாள் காதலி! மீனாக்கு வந்த போன்.. பாவம் கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 9ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடு,( Pandian Stores 2 serial Today Episode) சரவணன் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய சந்திப்புடன் தொடங்கியது. அது வேறு யாருமில்லை சரவணனின் முன்னாள் காதலிதான் இதனால் இனி பாண்டியன் குடும்பத்தில் என்ன பிரச்சனை வரப்போகிறதோ தெரியவில்லை ஆனாலும் இன்று என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், Pandian Stores 2 serial Today Episode (Feb 9, 2026) சரவணன் பிரச்சனைகளால் மனமுடைந்த நிலையில் இருப்பதை கவனித்த கோமதி, அவரை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வருமாறு சொல்கிறார். அதன்படி கோவிலுக்கு சென்ற சரவணன், தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கி வெளியே வரும்போது, எதிரே வந்த ஒரு பெண்ணுடன் எதிர்பாராத விதமாக மோதுகிறார். பின்னர் தான் அந்த பெண், சரவணனின் முன்னாள் காதலி அஞ்சலி என்பது தெரிய வருகிறது.
பிளாஷ்பேக் கதை
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசுகிறார்கள். சரவணன், அஞ்சலியிடம் அவர் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்க, அஞ்சலி தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து, தற்போது அம்மா வீட்டில் இருப்பதாக தெரிவிக்கிறார்.
மறுபுறம் சரவணனும் தன் மனைவி தங்கமயிலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகிறார். இந்த சந்திப்பு, சரவணன் வாழ்க்கையில் மீண்டும் அஞ்சலி முக்கிய இடம் பிடிக்கப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கதிர் பிளான்
இதற்கிடையில், சென்னையில் ராஜி மற்றும் கதிர் இருவரும் கோச்சிங் கிளாஸ்க்கு செல்லும் வழியில் ஒன்றாகச் சந்தோஷமாக நேரம் செலவிடுகிறார்கள். மற்றொரு பக்கம், மீனாவும் செந்திலும் பேசிக் கொண்டே அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அப்போது கோமதி, மீனாவுக்கு போன் செய்து, உங்க மாமா என் கூட என்னமோ பேசல நான் இனி அவர் கூட பேச மாட்டேன், எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். மீனாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
அப்போது தன்னுடைய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில் இருக்கும் மாமியார் மருமகள் பாசத்தை பார்த்து செந்தில் கண் வைக்கிறார். சிறிது நேரத்தில் தங்கமயில் மீனாவுக்கு போன் செய்து பேச, அதை கவனித்துக் கொண்டிருந்த செந்தில், மீனா இன்னும் தங்கமயிலுடன் தொடர்பில் இருப்பது பற்றி கோபப்பட்டு, சண்டை போட்டுவிட்டு நடந்துகொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
இறுதியாக, கோச்சிங் கிளாஸ் முடிந்த பிறகு ராஜியை அழைத்துக் கொண்டு புடவைக் கடைக்கு செல்லும் கதிர், அவளுக்கு பிடித்த புடவையை வாங்கிக் கொடுக்கிறார். பிறகு கோமதி கதிருக்கு போன் செய்து ராஜி எப்படி இருக்கா? அவளை நல்லா பாத்துக்கோ.. அவ ரொம்ப பாவம் என்று செண்டிமெண்டாக பேசுகிறார். உங்க அப்பா என்கிட்ட பேசாத மாதிரி நீயும் ஏதாவது சண்டைனா ராஜி கூட பேசாம இருந்துடாத என்று கோமதி சொல்ல, அதற்கு கதிர் அப்பா சீக்கிரமா உன்னை புரிஞ்சுகிட்டு பேசுவாருமா.. என்று ஆறுதல் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications