Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial March 31, 2026 Update) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 31ம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் செய்த அலட்சியத்தால் கோமதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial Today Episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், காந்திமதி குமார் மற்றும் அரசி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்திருக்கிறார். ஆனால் அரசி காந்திமதியின் பிளானை கேட்டு கோபமாகி காந்திமதி திட்டுகிறார். அதோடு குமாரையும் திட்டுகிறார். ஆனால் குமார் நான் முன்ன மாதிரி இல்லை இப்போ திருந்திட்டேன் என்று சொல்ல, நீ திருந்தினா சந்தோஷம்தான்.. ஆனால் இனி உன் வாழ்க்கையில் நான் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

கண்டுகொள்ளாத பாண்டியன்

மறுபக்கத்தில் கோமதி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியன் வந்து தன்னுடைய பேங்குக்கு போக வேண்டும் என்பதற்காக செக் புக் தேடிக் கொண்டிருக்கிறார். அதை கவனித்த கோமதிக்கு பாண்டியன் செக் புக் தேடுகிறார் என்று தெரிகிறது. ஆனாலும் எடுத்துக் கொடுக்காமல் தன்னுடைய வேலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சின்னதாக தலை சுற்றுகிறது... அதற்கு பிறகு தான் சாப்பிடவில்லை என்பது அவருக்கு நினைவிற்கு வருகிறது. உடனே சாப்பிட போகிறார்.

மயங்கி விழுந்த கோமதி

அப்போது பாண்டியன் செக் புக்கை கண்டுபிடித்து விடுகிறார். அதே நேரத்தில் போகுவது தலை சுற்றி கீழே விழுந்து என்னங்க என்று பாண்டியனை கூப்பிட அதற்கு பாண்டியன் இவளுக்கு வேற வேலையே இல்லை இப்படித்தான் நாடகம் போட்டுட்டு இருப்பார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு சரவணன் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது கதவு எல்லாம் திறந்து இருக்கிறது வீட்டில் யாரையும் காணவில்லை என்று தேட அப்போது கோமதி மயக்க நிலையில் விழுந்து கிடப்பதை பார்த்து பதறியபடி வெளியே வர அங்கு பழனியும் அவருடைய மனைவியும் இருக்கின்றனர்.

சரவணன் சொன்ன செய்தி

உடனே விஷயத்தை சொல்ல எல்லோரும் சேர்ந்து கோமதி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகின்றனர். ஹாஸ்பிடலுக்கு போனதும் சரவணன் பாண்டியனுக்கு போன் செய்ய, பாண்டியன் போனை எடுக்கவில்லை. இதனால் நேரடியாகவே சரவணன் வந்து இந்த விஷயத்தை சொன்னதும் பாண்டியன் பதறிப் போகிறார்.

டாக்டர் சொன்ன விஷயம்

கோமதி கூப்பிட்ட பிறகும் நான் தானே பார்க்காமல் வந்து விட்டேன் என்று பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அங்கு ஏற்கனவே மீனா செந்தில் எல்லோரும் ஹாஸ்பிடலில் இருக்கின்றனர். அங்கு டாக்டர் கோமதிக்கு தீவிர சிகிச்சை நடந்துட்டு இருக்கு. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று சொல்ல மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+