Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர் 2: மயில் அப்பா செய்த சூழ்ச்சி, கோபத்தில் பாண்டியன்! மீனா பிளான், அடுத்த பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிரபலமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் - மீனா தனிக்குடித்தன பிரச்சனைகள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, மறுபக்கம் சரவணன் - பழனி - மயில் குடும்பத்தின் கடையில் நடந்த குழப்பங்கள் தான் இன்றைய எபிசோடின் ஹைலைட்டாக இருந்தது. குறிப்பாக, மயிலின் அப்பாவின் திருட்டு வேலையால், பழனிக்குக் கடை முதலாளியான பாண்டியனிடம் அவமானம் நேர்ந்தது!

Pandian Stores serial vijay tv 2

பொறுப்பில்லாத செந்தில்

தனிக்குடித்தனம் வந்த பிறகு, செந்திலின் பொறுப்பில்லாதச் செயல்களால் மீனா ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாள். சமைப்பதற்கானப் பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற எந்த வேலையும் செந்தில் செய்யவில்லை. ஏதாவது வேண்டுமென்றால், மீனாவையே போய் வாங்கி வரச் சொல்லிச் சமைக்கச் சொல்கிறான். இதனால் அப்செட்டான மீனா, மாமனார் வீட்டிலே போய் உட்கார்ந்து கொள்கிறாள்.

காலை சண்டை

காலையில் ஆஃபீஸுக்குக் கிளம்பும் மீனா, செந்திலை எழுப்பிப் பால் பாக்கெட், தோசை மாவு வாங்கிட்டு வருமாறு சொல்கிறாள். ஆனால் செந்திலோ, "இந்த வீட்லயாச்சும் நிம்மதியா தூங்க விடு. நீ போய் எல்லாம் வாங்கிட்டு வா" என்று சொல்லி மீண்டும் படுத்துத் தூங்குகிறான்.
பிறகு எழுந்த செந்தில், காபி கேட்கும்போது, மீனா "பால் இல்லை" என்கிறாள். காலைச் சாப்பாடு செய்தாயா என்று கேட்க, "அதுவும் இல்லை" என்று கூறுகிறாள். இதனால் கடுப்பான செந்தில், "என்ன மீனா இதெல்லாம்? போய் கடையிலப் பால் பாக்கெட், தோசை மாவு வாங்கிட்டு வந்து இருக்கலாம்ல" என்று கேட்கிறான். அதற்கு மீனா, "என்னால கடைக்கும் போயிட்டு, சமைச்சும் வைக்க முடியாதுங்க. தனிக்குடித்தனம் வந்தால் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம்னு சொல்லிட்டு, கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம இருக்கீங்க!" என்றுத் திட்டிவிட்டு ஆஃபீஸிற்குப் புறப்படுகிறாள்.

இதையடுத்து, மீனா நேராக மாமியார் வீட்டுக்கு வந்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள். அவளிடம் கோமதி, "செந்திலுக்குச் சமைச்சு வைச்சியா?" என்று கேட்க, "அதெல்லாம் பண்ணி கொடுத்துட்டேன் அத்தை" எனச் சமாளிக்கிறாள்.

மயிலின் அப்பாவின் திருட்டுப் பிளான்

மயிலின் அப்பா கடையில் பணம் திருடுவதை நேரில் பார்த்தும் சரவணனால், அப்பாவுக்கு அதைச் சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. இப்படியானச் சூழலில், தீபாவளி வியாபாரம் களை கட்டுகிறது. பாண்டியன் வெளியில் போகும்போது, மயிலின் அப்பா கல்லாப் பெட்டிக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துவிட்டு, "சரவணன், பழனியை டெலிவரியைப் பார்த்துகோங்க. நானும் மயிலும் கடையைப் பார்த்துக்கிறோம்" என்கிறான்.

சரவணனின் அதிரடி முடிவு

இதனைக் கேட்டு உஷாரான சரவணன், "இந்த ஆளு கல்லால இருக்க எல்லாப் பணத்தையும் ஆட்டையப் போட்டுருவான்" என முடிவு எடுக்கிறான். அதனால், பழனியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, சரவணன் மட்டும் டெலிவரிக்குக் கிளம்புகிறான்.

பழனிக்கு நேர்ந்த அவமானம்

சரவணன் தனியாக டெலிவரிக்குச் சென்றது பழனிக்குப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. பாண்டியன் கடைக்கு வந்ததும், "நீ டெலிவரிக்குப் போகலையாடா?" என்றுப் பழனியிடம் கேட்கிறான். சரவணன் தான் கடையில் இருக்கச் சொன்னான் என்று பழனி கூற, பாண்டியன் கடுமையாக, "உனக்குப் பொறுப்பு இல்லையா?" என்று பழனியை திட்ட ஆரம்பிக்கிறார்.

இதுதான் சமயம் என்று மயில் மற்றும் அவளுடைய அப்பாவும் ஒத்து ஊத ஆரம்பிக்கின்றனர். மயிலின் அப்பா வேண்டுமென்றே, "இப்படியெல்லாம் இருந்தால் பிசினஸ் பண்ண முடியாது சம்பந்தி" என்றுப் பழனியை மேலும் அவமானப்படுத்துகிறான். தொடர் அவமானங்களால் பழனி கடுப்பாகி டெலிவரிக்குக் கிளம்புகிறான். இந்தக் தொடர் அவமானத்தால் பழனி இனிமேல் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதுதான் இனி வரவிருக்கும் எபிசோடின் பெரிய எதிர்பார்ப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+