Pandian Stores 2 serial: குடும்பத்திற்குள் நடந்த அடிதடி! பழனி மீது வீண்பழி! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
சென்னை: (Pandian Stores 2 serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குடும்ப பாசம் ஒரு பக்கம் நெகிழ வைக்க, மறுபக்கம் தொழில் போட்டியால் சண்டைகள் வெடித்துள்ளன. இன்று, கோமதி அக்காவுக்காக பழனி செய்த செயல் மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், பாண்டியனின் கேள்வியால் பழனிக்கு குழப்பம் நீடிக்கிறது.

கோமதிக்கு சீர் கொடுத்தப் பழனி
கோமதி, தனக்கு பிறந்த வீட்டு சீர் கொடுப்பதற்கு ஆள் இல்லையே என்று வருத்தத்தில் இருக்கிறாள். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத காரியம் ஒன்றை செய்து மொத்த குடும்பத்தினரையும் பழனி நெகிழ்ச்சியில் தள்ளிவிடுகிறான். அக்காவுக்காக புடவை, பழங்கள் எல்லாம் வாங்கிட்டு வந்து சீர் கொடுக்கிறான் பழனி.
கோமதியின் மகிழ்ச்சி
இதனால் எமோஷனலாகும் கோமதி, கண்ணீருடன் பழனியின் தோளில் சாய்ந்து கொள்கிறாள். "எல்லாரிடமும் எனக்காக என் தம்பி வாங்குன புடவையை பாருங்க" எனச் சொல்லி காமிக்க ஆரம்பிக்கிறாள். இந்த காட்சியால் வீட்டில் உள்ள அனைவரும் நெகிழ்ச்சி அடைகின்றனர். மறுபக்கம், முத்துவேல் வீட்டில் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. பழனி, சுகன்யாவுக்காக டிரெஸ் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
முத்துவேலின் கேள்வி
அப்போது முத்துவேல், "சீர் எல்லாம் கொடுத்துட்டுப் போயிட்டாங்களா?" என்று கேட்கிறான். அதற்குச் சுகன்யா, "அதெல்லாம் கொடுத்துட்டாங்க. இவரை நினைச்சுத் தான் வருத்தப்பட்டாங்க. சின்னப் பையன் கதிர் கூட டிராவல்ஸ் ஆரம்பிச்சுட்டான். இவர் இன்னமும் இப்படி இருக்காரேன்னு கவலைப்பட்டாங்க" என்றுப் பழனியின் அண்ணன்களை பற்றிப் பேசிக் கொளுத்தி போடுகிறாள்.
கடை வைக்கும் விஷயத்தில் குழப்பம்
முத்துவேல், பழனிக்குத் தனியாகக் கடை வைத்து கொடுப்பதில் உறுதியாக இருக்கிறான். காந்திமதி, "இவனுக்குக் கடை வைச்சுக் கொடுக்குறது என்னப்பா ஆச்சு?" என்று விசாரிக்க, முத்துவேல், "கடையை பார்த்தாச்சும்மா. தீபாவளிக்கு அப்பறம் நல்ல தேதி பார்த்து கடை திறக்கிறது தான் வேலை" என்கிறான்.
பழனி ஷாக்
இதைக்கேட்டப் பழனிக்கு ஷாக்! இன்னமும் தான் மச்சான்கிட்ட இதைப் பற்றி பேசவே இல்லை என்றுச் சொல்கிறான். "இதுக்கு மேலயும் என்னால அசிங்கப்பட முடியாது" என்று சுகன்யாவும் கூற, அண்ணன்களும் "இந்தத் தடவை கடை திறக்கிறதுல எந்த மாற்றமும் கிடையாது" என உறுதியாக சொல்கிறார்கள். இதனால், பழனி என்ன செய்வது என்றுத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளான்.
பாண்டியனின் சந்தேகம்
இதற்கிடையில், வீட்டுக்கு வந்த பிறகு, கதிர், சரவணன், செந்தில் மூவரிடம் கடை விஷயமாகப் பேசலாம் என்று பழனி யோசிக்கும்போது, சரியாக அங்கே பாண்டியன் வந்துவிடுகிறான். பாண்டியன் வந்ததும், "உன் அக்காவுக்குப் புடவை எடுக்கப் பணம் ஏதுடா உனக்கு? கடைல இருந்து எதுவும் எடுத்தியா? கணக்கு எழுதுறதுக்காகத் தான் கேட்குறேன்" என்று சந்தேகத்துடன் கேட்கிறான். இதனால் அதிர்ச்சியாகும் பழனி, சீர் கொடுத்த பணத்திலே புடவை வாங்கியதாக சொல்கிறான். அரசி வந்து வெடி வைக்க அழைக்க, சண்டை எஸ்கேப் ஆகிறது.
கொண்டாட்டத்தில் சண்டை
வெளியே அனைவரும் வெடி வைக்கத் துவங்க, எதிரில் காந்திமதி குடும்பமும் கொண்டாடுகிறது. அப்போது சரவணன் தன்னை ரோட்டில் வைத்து அடித்ததை நினைத்துப் பார்க்கும் குமார், வேண்டுமென்றே அவர் மீது வெடியைத் தூக்கிப் போடுகிறான். இதனால் கடுப்பாகும் கதிர், செந்தில், குமாருடன் சண்டைக்கு வருகின்றனர். சத்தம் கேட்டு முத்து, சக்திவேலும் வர வாக்குவாதம் வெடிக்கிறது. காந்திமதி இடையில் புகுந்து சமாதானம் செய்து வைக்கிறாள்.
இப்படியாக, பாசமும், போட்டியும் கலந்துக் கலகலப்பானத் திருப்பங்களுடன் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications