மீண்டும் அப்பாவான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்.. குழந்தை குறித்து நெகிழ்ச்சியான பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்திலும், இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெங்கட் ரங்கநாதன் தனக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்ததாக அறிவித்திருக்கிறார். குழந்தையின் கை விரல்களை தான் வருடியபடி போட்டோவை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதல் பாகத்தில் ஜீவா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் வெங்கட் ரங்கநாதன். சோசியல் மீடியா பக்கங்களிலும் பயங்கர பிசியாக இருக்கிறார். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது.

மீண்டும் சீரியலில் நடிப்பு
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா மீனாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அந்த சீரியல் முடிவுக்கு வந்த போது இவரை அதிகமான ரசிகர்கள் மிஸ் பண்ணியிருந்தனர் இரண்டாவது சீசன் தொடங்கும் போது ஆரம்பத்தில் வெங்கட் அந்த சீரியலில் இல்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து மீனாவுக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் நடிக்க தொடங்கி இருந்தார். இப்போது அவர்தான் அந்த சீரியலில் மீனாவுக்கு ஜோடியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேவரைட் ஜோடி
இவர்களுடைய காட்சிகள் சமீபத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் இப்போது ராஜி கதிர் ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல மீனா செந்தில் ஜோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மீனா கதிர்வேலுவை கொலை செய்த விட்டதாக மீனா அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அவர் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்று தெரிந்ததும் தான் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

நடிகர் வெங்கட் குடும்பம்
மீனாவை காப்பாற்றுவதற்காக செந்தில் அம்பாசமுத்திரம் வந்திருந்தார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் வெங்கட் ரங்கநாதன் தான் இரண்டாவது முறையாக அப்பாவாக ஆகி இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் நேற்று இரவு பகிர்ந்து இருக்கிறார். வெங்கட் ரங்கநாதன் அனுஜா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றார். இந்த நிலையில் இரண்டாவதாக நேற்று இரவு வெங்கட்டுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இரண்டாவது குழந்தை பிறப்பு
இது குறித்து வெங்கட் மகிழ்ச்சியாக சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இதுவரைக்கும் எந்த இடத்திலுமே வெங்கட் பகிர்ந்து கொள்ளவில்லை. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. ஆரம்பத்தில் அடிக்கடி குடும்பத்தோடு போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியிட்டு வரும் வெங்கட் இப்போது சமீப காலமாகவே தன்னுடைய சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை மட்டும் தான் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தோடு எடுக்கும் புகைப்படங்களை பகிரவில்லை. இந்த நிலையில் இவருக்கு குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை மட்டும் பகிர்ந்து நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications