தமிழ் பற்றுக்கு மரியாதை கிடையாதா? அந்த மாதிரி வீடியோக்கு அவார்ட்? பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை அதிருப்தி
சென்னை: ஒரு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் இதை பேசவில்லை, நாம் எதை கொண்டாடுகிறோம் என்பதுதான் கேள்வி என்று நடிகை சரண்யா துராடி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அவருக்கு பலரும் சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வரும் சரண்யா துரோடி சினிமா சீரியல் மட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நீண்ட பதிவு விருது கலாச்சாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
நடிகை சரண்யா துரோடி பதிவு
ஒரு தனியார் செய்தி ஊடகத்தின் டிஜிட்டல் விருது விழாவில் பெஸ்ட் செலிப்ரட்டி கிரியேட்டர் என்ற பிரிவில் இவர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அந்த அதிருப்தியில் தான் அந்த பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், ஆரம்பத்திலேயே, இன்னைக்கு கொஞ்சம் உண்மையான ஓபனாக ஒரு விஷயம் பேசலாமா? சமீபத்தில் ஒரு தனியார் டிஜிட்டல் அவார்ட்ஸ் அறிவித்தபோது நானும் நாமினேட் ஆகி இருந்தேன்.
நான் எழுத்து கூட்டி படித்ததில் இருந்து அந்த பத்திரிக்கையை தான் படித்து வருகிறேன். என்ன படிக்கணும்? உலகத்தை எப்படி பார்க்கணும் என நான் படித்த புத்தகங்களும் கட்டுரைகளும் தான் கட்டமைத்தது. நான் செய்தி துறைக்கு வந்ததும் அப்படித்தான். அந்த அளவுக்கு எனக்கு அந்த பத்திரிகை மீது பெரிய நம்பிக்கை இருந்தது. அவங்க நம்மை கவனித்து நாமினேட் பண்ணுனது எனக்கு ரொம்ப ஸ்பெஷலாகவும் ஒரு உணர்வுபூர்வமான விஷயமாகவும் இருந்தது. ஆனால் அந்த கேட்டகிரியோட பைனல் ரிசல்ட் பார்த்தபோது ஒரு மாதிரி கனமா இருந்துச்சு.
வெற்றியாளர் யாருன்னு பார்த்து, அவங்க youtube வீடியோ எல்லாம் பார்த்தேன். அதில் கெட் ரெடி வித் மீ வீடியோக்கள், மேக்கப் விலாக், ஷாப்பிங் விலாக்ஸ், ரெஸ்டாரன்ட் விசிட், மேக்கப் போடலாம் வாங்க, பெஸ்ட் பிரண்ட் சர்ப்ரைஸ் பண்ண போறோம் பிரான்சு வகை வீடியோக்கள் தான் இருந்தது. இவங்கதான் சிறந்த செலிப்ரட்டி கண்டன்ட் கிரியேட்டர்? ஆன்லைன்ல எல்லாத்துக்கும் இடம் இருக்குதான் ஆனால் எதை கொண்டாடுறீங்க எதுக்கு அங்கீகாரம் கொடுக்கறீங்கன்னு பார்க்க வருத்தமா இருக்கு.

இரண்டிற்கும் ஒரே மதிப்பா?
இவங்க ஒரே தராசுல வச்சு இருக்கும் அந்த குறிப்பிட்ட சேனலும் என்னுடைய சேனலும் சுத்தமா வேறு ஒரு உலகத்தை சேர்ந்தது. புவிசார் அரசியல், வரலாறு, மொழி, கலாச்சாரம், இலக்கியத்திலிருந்து மிக முக்கியமான சமூக பிரச்சனைகள், அரசியல், ஆன்மீகம், தமிழ் சித்தர்களின் தத்துவம் வரை எத்தனையோ விஷயங்கள் ஆழமா ஆராய்ந்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு வீடியோவுக்கும் பின்னாடி எத்தனை புத்தகங்கள் ரெபர் பண்ணுறேன். மணிக்கணக்கா உட்கார்ந்து, படித்து, எழுதி, உட்கார்ந்து குறிப்பு எடுத்து.. சூட்டிங்காக வெளியே போனா கூட அந்த ரிஹெல்ஸோட தான் சுத்துகிறேன். என்னோட ஸ்கிரிப்ட்டை நான் எப்பவும் வெளியே யாரிடம் கொடுத்தது கிடையாது. ஷூட்டிங்கில் எவ்வளவு பிசியா இருந்தாலும் ஸ்கிரிப்டை நான் தான் எழுதுகிறேன். ஒவ்வொரு ஃபிரேம்லயும் என்னோட நேரத்தையும் வேர்வையும் மூளையும் முழுசா கொட்டி இருக்கிறேன்.
என்னையா பண்ணி வச்சிருக்கீங்க? சிறகடிக்க ஆசை சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வாடை அடிக்குதே! அதே கதையா?
கிரியேட்டிவிட்டியை கொண்டாடுகிறோம்னு சொல்லிக்கிற ஒரு அவார்ட் இந்த மாதிரி உண்மையான அறிவு சார்ந்த உழைப்பை கட் பண்ணிட்டு வெறும் டிரண்ட்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் போது ஒரு நிமிஷம் யோசிக்க வைக்குது நாம பண்ற வேலையோட ஆழத்துக்கு இனிமே எந்த மதிப்பும் இல்லை என்று தோணுகிறது. அடுத்த சீசன்ல நாமளும் இந்த புத்தகத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு மேக்கப் ரோட்டின், லைப் ஸ்டைல் விளாக் போட்டா தான் வர முடியுமா? என்று கூட தோன்றுகிறது.
ஆனால் மனசுக்கு நல்லா தெரியும் அது நான் கிடையாது, நீங்களும் அதுக்காக என் தளத்தில் இணையல. இதெல்லாம் ஏதோ எனக்கு அவார்டு கிடைக்கலன்னோ கோபத்திலோ இல்ல ஒரு கோப்பைக்காகவோ நான் புலம்பல. நான் சார்ந்திருக்கிற இந்த சமூகத்துக்கு என்னால முடிஞ்ச கைமாறு தான் இந்த யூடியுப் தளம். எனக்காக சப்போர்ட் பண்ணிய.. அந்த திரைக்குப் பின்னால் இருக்கிற உழைப்பை மதிக்கிற ஒருத்தருக்கும் ரொம்ப நன்றி நீங்கள் தான் என்னோட உண்மையான பலம். அவார்ட்ஸ் இதெல்லாம் இன்னைக்கு இருக்கும் நாளைக்கு போயிடும். ஆனால் உண்மையான வரலாற்றின் மூலமாக நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற பந்தம் என்னைக்கு மாறாது.
நீலாம்பரி ஸ்டைலில் அமைச்சர் ராஜ்மோகனை கவனித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.. ரசிகர்கள் சொல்வது இதுதான்
நிஜமாகவே ரொம்ப அவசியமான முக்கியமான மனித சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை நாம் தொடர்ந்து பேசிக்கிட்டே இருப்போம் என்று அந்த பதிவில் நடிகை சரண்யா சொல்லி இருக்கிறார். அவர் எந்த அளவிற்கு ஆதங்கப்பட்டதற்கு காரணம் அவர் சமீப காலமாகவே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கிற கேப்பில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பல அறிவார்ந்த விஷயங்களை பேசி செய்து வருகிறார்.

சரண்யாவின் ஆதங்கம்
ஏற்கனவே அவர் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்ததால் வரலாற்று காவியங்கள், பல தலைமுறைகளுக்கு தெரியாத விஷயங்களை தோண்டி எடுத்து ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு புரியும் படி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுபோன்று முயற்சி எடுத்து வீடியோக்கள் உருவாக்குபவர்களை விட சாதாரணமாக வீடியோக்கள் வெளியிடுபவர்களைத்தான் இந்த சமூகத்தினர் கொண்டாடுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் தான் இப்போது நடிகை சரண்யா பதிவு வெளியிட்டிருக்கிறார். பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி சப்போர்ட் கொடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
