தம்பியை பாம்பு கடிச்சுட்டு! உயிருக்கு போராடும் போது ஹாஸ்பிடலில் நடந்த கொடுமை! சீரியல் நடிகை தீபிகா ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாவாக நடித்து பிரபலமடைந்த விஜே தீபிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தம்பிக்கு பாம்பு கடித்து விட்டதாம். அப்போது சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் பார்க்க போகும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து அவர் பேசி இருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா படத்தை அவ்வளவு சீக்கிரமாக யாராலும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தில் ஒரு ஹாஸ்பிடலில் இறந்து போன ஒருவரை வைத்து ட்ரீட்மென்ட் செய்வது போல டாக்டர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பார்கள். பிறகு கடைசியாக விஜயகாந்த் சொன்னது போலவே நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டோம் ஆனால் இவருடைய உயிரை காப்பாற்ற முடியலன்னு சொல்லுவாங்க.

அதோடு அவங்க சொல்லுற பணத்தையும் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்கன்னு சொல்லுவாங்க. அதே போல சீரியல் நடிகை தீபிகாவிற்கும் நடந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயம் அதை விட கொஞ்சம் சீரியஸான விஷயமாகத்தான் இருக்கிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் உட்பட ஒரு சில சீரியல்களிலும் சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கப்பட்டிருக்கும் அண்ணாமலை குடும்பம் சீரியலிலும் நடிக்கும் தீபிகா தான் தனக்கு நடந்த அனுபவத்தை பற்றி பேசி இருக்கிறார்.
தீபிகாவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன்பு பாம்பு கடித்து விட்டதாம். உடனே அண்ணா நகரில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி கொண்டு போயிருக்கிறார். அங்கு பாம்பு கடிக்கான ட்ரீட்மென்ட் கொடுக்க சரியான வசதிகள் இல்லாமல் இருந்திருக்கிறது ஆனாலும் அதை முதலில் இவர்களிடம் சொல்லவில்லையாம். சொல்லாமலே ட்ரீட்மென்ட் பார்க்கிறோம் என்று சொல்லி முப்பதாயிரம் பணத்தை கட்ட சொல்லி இருக்கிறார்கள். இவரும் பணத்தை கட்டி இருக்கிறார்.
பிறகு அங்கே இங்கே டாக்டர் ஓடிக்கொண்டே இருந்தார்களாம். அந்த டெஸ்ட் இந்த டெஸ்டிங் எடுத்துவிட்டு கடைசியாக இங்கு ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்து டாக்டர்ஸ், சிஸ்டர் செய்வதை பார்த்து இவங்களுக்கு டவுட்டு வந்திருக்கு. அவங்க இங்கே இதற்கு சரியான டிரீட்மென்ட் இருக்கா என்று கேட்டதற்கு, பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார்களாம்.
கடைசியாக இங்கே முடியாது வேற ஹாஸ்பிடலுக்கு போங்க என்று சொன்னதும் இவருக்கு கோபம் வந்துவிட்டதாம். ஆம்புலன்ஸ் ரெடி பண்ண முடியுமா என்று கேட்டதற்கும் சில ப்ரோசிஜர் இருக்கு வெயிட் பண்ணுங்க என்று சொல்லி இருக்கிறார். தம்பி உயிருக்கு போராடும் போது ஹாஸ்பிடலில் நடந்த சம்பவங்களை பார்த்து தீபிகாவிற்கு கோபம் வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அங்கே இருந்தவர்களை அடித்து விடலாம் என்பது போல இருந்ததாம்.
ஆனாலும் வேற வழி இல்லாமல் தீபிகா தன்னுடைய காரிலேயே தம்பியை வேற ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் மூன்று நாள் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அவர் உயிர் நிலைத்தாராம். உயிருக்கு போராடும் நேரத்தில் கூட சில ஹாஸ்பிடலில் பணத்துக்காக இதுபோல அலட்சியமா நடந்துக்கிறாங்க, பொதுவாக டாக்டர்ஸ் என்றாலே மரியாதையும், அவங்கள கையெடுத்து கும்பிட தோணும் ஆனா ஒரு சிலர் இதுபோல பணத்திற்காக செய்யும் செயலை பார்த்து வருத்தமாவும் கோபமாகவும் வருது என்று தீபிகா சொல்லி இருக்கிறார்.
தீபிகாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் அருகில் உள்ள ஒரு கிராமம் தான். திருநெல்வேலியில் இருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து அங்கிருந்து முயற்சியில்தான் இப்போது தொடர்ந்து சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் அண்ணாமலை குடும்பத்தார் சீரியலில் இவருடைய கேரக்டர் மற்றும் அந்த சீரியல் பற்றி இவர் பேசும்போது தான் தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு அதிகமாக வருத்தம் ஏற்படுத்திய சம்பவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
-
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications