நிஜத்தில் புடவைக்காக சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை... மனம் திறந்த ஹேமா.. இனி கதை இதுதானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் ஹேமா நடித்து வருகிறார்.
ஹேமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஹேமா தனமாக நடிக்கும் சுஜாதாவுடன் புடவைக்காக சண்டை போட்டதாக கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி சண்டை போட்டு பிரிந்திருப்பதை பார்த்து பல ரசிகர்கள் இந்த சீரியலை பாராட்டி வருகிறார்கள். ஒரு குடும்பம் பிரிந்தால் இந்த அளவிற்கு பலருக்கு சந்தோஷம் என்பது இப்போதுதான் தெரிகிறது. கூட்டு குடும்பமாக இருந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்போது தனித்தனியாக பிரிந்து கொண்டிருக்கிறது. அடுத்த இந்த சீரியலில் முல்லையின் வளைகாப்பில் அனைவரும் சேர்வார்களா? இல்லையா? என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றது.
அந்த சீரியலில் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீரியல் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான் ஆரம்பத்தில் நடிக்க இருக்கிறேன் என்றபோது அதிகமானோர் திட்டினார்கள். எனக்கு முன்பு நடித்த நடிகை ப்ரோமோவில் மட்டும்தான் நடித்திருந்தார். எபிசோடில் நான் தான் அறிமுகமாகிற மாதிரி இருந்தது. ஆனாலும் இன்னொருவர் நடித்த கேரக்டர் நமக்கு செட் ஆகுமா என்று நான் ஆரம்பத்தில் யோசித்தேன் என்று கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் மீனா கேரக்டரில் குழந்தைத்தனமாக அடிக்கடி நான் சண்டை போடுவது போன்று இருக்கும். அதனால் என்னை அதிகமான ரசிகர்கள் திட்டி இருக்கிறார்கள். என்ன இந்த பொண்ணு இப்படி நடிக்கிறது என்று கூட பேசி இருக்கிறார்கள். அப்போது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருந்து. நான் என்னுடைய ஹெட் இடம் கூட போன் பண்ணி இப்படி எனக்கு நெகட்டிவ் ஆக வருவது கஷ்டமாக இருக்கிறது என்று சொல்ல, உங்களை பலரும் திட்டுகிறார்கள் என்றால் நீங்க உங்க வேலையை சரியாக செய்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொல்ல ஆமாம் தானே என்று பிறகு தான் எனக்கு புரிந்தது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிகமான ரசிகர்கள் என்னை பாராட்டுவதும் என்னை பற்றி கேட்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளியே செல்லும் இடங்களில் கூட பலரும் என்னை பாண்டியன் ஸ்டோர் மீனா தானே என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியல் எனக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடிக்கும் போது நான் சில முறை சின்னதாக சண்டை கூட போட்டு இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
முல்லை கேரக்டரில் ஆரம்பத்தில் விஜே சித்ரா நடித்துக் கொண்டிருக்கும் போது சுசித்ரா, நான், விஜே சித்ரா மூவரும் ஒரு போல புடவை எடுத்து இருந்தோம். எல்லாமே ஒரே டிசைன் ஆனால் கலர் தான் வேற, ஆனால் எடுத்துட்டு வந்து பார்த்த பிறகு எனக்கு பிடிக்கவில்லை. எதற்காக இந்த புடவையை எடுத்தீங்க என்று நான் சண்டை போட்டு இருக்கிறேன். இது எல்லாமே ஒரு வீட்டுக்குள் இருக்கும்போது ஏற்படும் சண்டை போன்று தான். பிறகு நாங்கள் அதை மறந்து விட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications