பாண்டியன் ஸ்டோர்ஸ் "கதிர்” வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்.. மனைவி வெளியிட்ட புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடிகர் குமரன் தங்கதுரை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் குமரன் சுகாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சுகாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதற்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதற்கு என்ன காரணம் மற்றும் இவர்களுடைய காதல் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடிகர் குமரன் ஆரம்பத்தில் குரூப் டான்சராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிறகு சின்னத்திரை நடன ஷோ மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை துவங்கி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் இவருக்கு திடீர் கல்யாணம் நடந்திருந்தாலும் நிஜத்தில் இவருக்கு காதல் திருமணம் தான் அடைந்து இருக்கிறது.
கதிர் ஆரம்பத்தில் ஒரு குரூப் டான்சராக ஆடி பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளின் மூலமாக ஒரு டான்ஸராக அறிமுகம் ஆகி இருந்தார். அப்போதுதான் அவருக்கு விஜய் டிவியின் மூலம் பிரபலம் அடைந்த சுகாசினி அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவருக்கும் ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் இருவரும் பின்பு காதலர்களாக மாறி இருக்கின்றனர்.
சுகாசினிக்கு கதிர் மீது காதல் வருவதற்கு காரணமே அவருடைய கேரக்டர் தானாம். கதிர் பலரிடம் பழகினாலும் அவர் கண்ணியமாக நடந்து கொள்வதும் அவரைப் பற்றிய பாசிட்டிவ் கருத்துக்கள் அதிகமான சுகாசினிடம் கூறியதால் சுகாசினிக்கு அவரை அறியாமல் காதல் ஏற்பட்டு விட்டதாம்.
இந்த நிலையில் நடிகர் குமரன் ஒரு வெஜிடேரியன் பிரியராம். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து அதிகமானோர் கலாய்த்து கொண்டு இருந்தாலும், இவருடைய தீவிரமான ரசிகைகள் பலர் இவரை சின்னத்திரை தளபதி என்று செல்லமாக அழைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் தான் விரும்புவதே இல்லை என்று பேட்டி ஒன்றில் கூட குமரன் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இவருடைய மனைவி சுகாசினி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவர் குமரனோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்று குமரன் மற்றும் சுகாசினியின் திருமண நாளுக்கு அதிகமான ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications