17 வருடம் ஆகுது.. போலீஸ் ஸ்டேஷனில் கதிர்.. கூட யாருன்னு தெரியுதா..? உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கேரக்டரில் நடிகர் குமரன் தங்கராஜன் நடித்து வருகிறார்.

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான் நடித்த எபிசோடுகள் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தந்தை மீது தனக்கு இருக்கும் பாசம் குறித்தும் தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்றியது குறித்தும் குமரன் அதில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

pandian stores Kumaran shares about his love for his father and fulfilling his fathers wish

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பலரும் எதிர்பார்த்திருந்த திருப்பங்கள் அடுத்தடுத்து வர தொடங்கி இருக்கிறது. பல மாதங்களாகவே கண்ணன் எப்போது ஜெயிலுக்கு போவார் என்று அதிகமான ரசிகர்கள் கேள்வி கேட்டு ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில் கண்ணன் லஞ்சம் வாங்கி மேல் அதிகாரியால் மாட்டி விடப்பட்டு ஜெயிலுக்கு போகிறார் போலீஸ் கண்ணனை கைது செய்து கூட்டிக்கொண்டு போகும் ப்ரோமோ வெளியான நிலையில் இந்த பிரமோ பற்றிய அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது கண்ணனை யார் வெளியே கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரன் தங்கராஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் 17 வயதிலிருந்து மேடையில் நான்கு ஐந்து பார்வையாளர்கள் கூடிய நிகழ்ச்சிகளில் என்னுடைய பயணத்தை தொடங்கினர். அது உங்க எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அப்போது ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் அவரிடமிருந்து நான் எந்தவித கருத்துக்களையும், கைத்தட்டல்களையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நான் நடிப்பதையே என்னுடைய திறமையையும் வந்து பார்க்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அது ஒருபோதும் நடக்கவில்லை அந்த முயற்சியை அவர் எடுத்ததே இல்லை.

pandian stores Kumaran shares about his love for his father and fulfilling his fathers wish

நான் ஒரு ஷார்ட் பிலிமில் நடித்துக் கொண்டிருந்த போது கூட அந்த வேலையை பார்க்க வருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அப்போதும் அது எனக்கு வெறும் கனவாகவே போயிருந்தது. அது வேறு யாரிடம் இல்லை. என்னுடைய அப்பாவிடம் தான் நான் ஆசைப்பட்டேன். ஒரு வழியாக இத்தனை வருடங்கள் கழித்து என்னுடைய அப்பா நான் நடிப்பதை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.

ஆனால் அந்த புகைப்படங்கள் மங்கலாகவும், மோசமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த புகைப்படங்களுக்கு பின்னால் எனக்கு நிறைய உணர்ச்சிகள் இருக்கிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

பெற்றோர்கள் செய்வது சில சமயங்களில் தவறாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அன்பை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. இன்று நீங்கள் எவ்வளவோ வளரலாம். ஆனால் நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் கடினமான காலங்களில் எந்த நேரத்திலும் உங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களை தேர்ந்தெடுத்ததால் தான் இன்று நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் குமரன் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+