பாண்டியன் ஸ்டோர்ஸ்: போட்டியில் ஜெயித்த ராஜி.. குமரவேலுவால் வரும் பிரச்சனை! கதிருக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மே ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராஜி டான்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார். அதே நேரத்தில் ராஜி மீது கதிருக்கு காதல் வருகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு வாரமாக சோக கீதங்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்பிலேயே ரசிகர்கள் இருந்தனர். குமாரவேல் அரசியை தேடி அம்பாசமுத்திரம் வந்திருந்தார். வந்திருந்த இடத்தில் அரசியிடம் பேச போகும்போது அவர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அதனால் குமாரவேல் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். அப்போது மீனா குமாரின் தலையில் தோசை கல்லால் அடிக்க அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

குமாரவேல் செய்த செயல்
அவரை பார்த்ததும் எல்லோருமே அவர் இறந்து போய்விட்டார் என்று நினைத்து விட்டனர். ஆனாலும் கோமதி தன்னுடைய அண்ணன் பையனை தனக்கு பிடிக்கவில்லை என்று அவரை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் குமார் மீது தனக்கு இருக்கும் பாசத்தை எல்லாம் சொல்லி அழுது கொண்டிருந்தார். அதுபோல ராஜி இத்தனை நாளாக அதனுடைய அண்ணனைப் பற்றிக் திட்டி கொண்டிருந்தாலும் ராஜியும் தன்னுடைய அண்ணன் இறந்துவிட்டார் என்று அழுது கொண்டிருந்தார்.
அழுகை காட்சி
மீனா நான் ஒரு கொலைகாரி ஆகிவிட்டேன் என்று அழுது கொண்டு இருந்தார். அரசி இத்தனை பிரச்சனைக்கும் காரணம் நான் தானே என்று அழுது கொண்டிருந்தார். இப்படியாக ஒரு வாரமாக அழுகை காட்சி போய்க்கொண்டிருந்தது. இது யாரும் எதிர்பார்க்காத சம்பவமாக இருந்ததால் அடுத்து என்ன நடக்கும் ஒரு வேலை உண்மையிலேயே குமாரு இறந்து விட்டாரா? அப்படி என்றால் ராஜி எப்படி டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வார்? யார் ஜெயிலுக்கு போவார்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வந்தது.
குமாரவேல் பிளான்
ஆனால் நேற்றைய எபிசோடில் குமாருக்கு உயிர் இருக்கிறது என்று ராஜி கண்டுபிடித்து இருந்தார். பிறகு அங்கு வந்த செந்தில் மற்றும் கதிரிடமும் இந்த விஷயத்தை சொல்லி இருந்தனர். இதனால் அவர்களும் நிம்மதியாக ரூமிற்கு வந்திருந்தனர். பிறகு குமாரவேலுவை எழுப்பி அவரிடம் எதற்காக இங்கு வந்தாய் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது குமார் அங்கு இருந்து தப்பிச்சு ஓடிப்போய்விட்டார். இதனால் குமாரவேல் இனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
வெற்றி பெற்ற ராஜி
இப்படியான நிலையில் தற்போது ரசிகர்கள் பல நாள் காத்திருந்த ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது டான்ஸ் போட்டியில் ராஜி கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனார். இப்போது அந்த காட்சிகள் தான் வந்திருக்கிறது. கோவில் திருவிழாவில் இறுதிப்போட்டியில் ராஜி செலக்ட் ஆகிறார். ஆனால் டான்ஸ் ஆடும் போது கதிரை பார்த்துக் கொண்டே டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்க, அதை கவனித்த மீனா ராஜிக்கு கண்ணு அங்கிட்டு இங்கிட்டு போகுதா பாரு அப்படியே கதிரை பார்த்துக்கிட்டே டான்ஸ் ஆடுறா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷத்தில் ராஜி
பிறகு பைனல் பாடலுக்கு டான்ஸ் ஆடும் போது மயக்கம் வந்தது போல நின்று விடுகிறார். இதனால் அவருக்கு இரண்டாவது பரிசு கொடுக்கப்படுகிறது. இரண்டாவது பரிசு என்று அறிவித்ததும் ராஜி சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் ஆசைப்பட்ட படியே பைக் சாவியை அவரிடம் கொடுத்ததும் அதை வைத்து ராஜி கதிரை காதல் பார்வை பார்க்க கதிரும் எனக்காக நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க என்று புரிந்து கொள்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல கேள்விகள் இருக்கு
எது எப்படியோ ஒரு வாரமா ரசிகர்களை பதற வைத்துவிட்டு இப்போது ரசிகர்களையும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். இந்த ப்ரோமோவால் இனி குமாரவேல் வந்து தான் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. ஒருவேளை அரசியை கடத்திக்கொண்டு போகப் போகிறாரா? அல்லது அரசியை மிரட்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்று கேள்விகளும் இருக்கிறது.
உங்கள் ஃபேவரிட் ஜோடி
காரணம் அரசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதனால் அடுத்ததாக அரசியின் திருமண டிராக் தான் போகும் என்று தெரிகிறது. இந்த சீரியலில் உங்களுக்கு பிடித்த ஜோடி யாரு பாஸ்? மீனா- செந்திலா அல்லது கதிர்- ராஜி ஜோடியா?
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications