மொட்டை மாடியில்... அண்ணியுடன் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் கண்ணன்!
சென்னை: கண்ணன் என்று பெயர் வைத்தால் இப்படியா பண்ணுவீங்க நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் ஆட்டத்தைப் பார்த்து.
சீரியல் நடிகர்களின் ஆட்டம்தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிலும் ஒவ்வொரு சீரியலிலும் அண்ணி, கொழுந்தனாக நடிப்பவர்கள்தான் அதிகமாக ரீல்ஸ் போடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை காவியா அறிவுமணியும், அவரது கொழுந்தனாக வரும கண்ணன், சரவண விக்ரமும் இணைந்து ஒரு ஆட்டம் போட்டுள்ளனர்.

பாண்டின் ஸ்டோர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது .இது போதாது என்று அந்த சீரியலில் புது கதையை விருவிருப்போடு சொல்கிறோம் என புதுசு புதுசாக கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர் .

அடிமைகளாக மாறிய ரசிகர்கள்
இதில் வரும் திருப்பங்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இந்த சீரியலுக்கு அடிமையாக மாறி விட்டது. என்னதான் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் இந்த சீரியலும் அடிக்கடி நெட்டிசன்களுக்கு கையில் கிடைத்த கரும்பு போலத்தான் சாறு பிழிந்து விடுகின்றனர். இந்த சீரியலின் கதை பல திரைப்படங்களின் கதைகளைப் போலவே இருந்தாலும் இது ரசிகர்கள் மத்தியில் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு கதையாக இருந்து வருவதால் பலரும் இதை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

அண்ணன் தம்பி கூட்டுக் குடும்பம்
நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் அண்ணியாக ஒருவர் வந்து குடும்பத்திற்காக குழந்தைகூட வேண்டாம் என்று இருந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்து புது மருமகள் அந்த வீட்டிற்குள் வரும் போது ஏற்படும் சிக்கல்களையும் அதற்குப் பிறகு ஏற்படும் குடும்ப ஒற்றுமையையும் பார்த்து பலர் இந்த சீரியலை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

பொறுப்பில்லாத கண்ணன்
வீட்டில் உள்ள மூன்று ஆண்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் கடைசியாக வீட்டில் பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் கண்ணனுக்கு தற்போது காதல் முளை விட்டிருக்கிறது . ஆனால் அந்தக் காதலும் நிறைவேறுமா ஆகாதா என்பதுதான் இந்த கதையின் சஸ்பென்சாக இருக்கிறது .இந்த நிலையில் மொட்டை மாடியில் அதே கண்ணன் தன்னுடைய மூன்றாவது அண்ணன் கதிரின் மனைவியுடன் கமலஹாசன் பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் .

முல்லையும் ஐஸ்வர்யாவும்
முல்லை மட்டுமல்லாமல் அதுவும் அந்த பாட்டில் ஐஸ்வர்யாவும் கண்ணனுக்காக போட்டி போட்டிருக்கிறார்கள். இந்த சீரியலின் நடிகர்களை அந்த கேரக்டராகவே பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை பார்த்ததும் ஷாக்காகி என்ன கண்ணா மொட்டைமாடியில் அண்ணி கூட இந்த ஆட்டம் போடுற, உங்க அண்ணன் பார்த்தா நிலைமை என்ன ஆகும் என்று இவருக்கு வார்னிங் கொடுத்து வருகின்றனர் .

அண்ணன் என்ன நினைப்பாரு
நடிப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா சீரியலில் முழுக்க அண்ணி என்று பின்னாடியே சுற்றி கொண்டிருக்கும் நீ இப்படி அண்ணி கூட ஆட்டம் போடுறியே என கலாய்த்தும் வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது காவியா அறிவுமணி நல்லாவே ஆடுகிறார். ஐஸ்வர்யாவின் ஆட்டமும் சூப்பராகவே இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மொட்டை மாடியில் நடந்த இந்த டான்ஸ்தான் இப்போது வைரலாகி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications