Pandian Stores Serial: பசிக்கு சாப்பாடு... இதிலென்ன அவமானம் கிடக்கு?
சென்னை:விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தினமும் மாலை 4 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்து வருது. இரவில் சாப்பிடாமல் படுத்துவிட்ட முல்லைக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்து சாப்பிட சொல்கிறான் கதிர்.
இதில் கதிர், முல்லை வரும் காட்சிகள் மட்டும்தான் அண்மையில் ரசிகர்கள் மிகவும் விரும்பிப் பார்த்தவை. கட்டாய கல்யாணம் செய்துக்கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு நெருக்கமாக விரும்பும் எபிஸோட்ஸ் ஒளிபரப்பாகி வருகையில்தான் லாக்டவுன்.
இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை முல்லை, கதிர் கல்யாண எபிசோடில் ஆரம்பித்து சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருது விஜய் டிவி. தொலைக்காட்சிகள் இப்போது சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருவது என்பதிலும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.

அப்பவே அவ்ளோ பொறுமை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரொம்ப நிதானமா காட்சிகள் நகரும் என்றாலும், உட்கார்ந்து பார்க்கலாம்... என்கிற ரகத்தில் இருந்தது. இந்த நிலையில் நிதானமான கட்சிகளைக் கொண்ட இந்த சீரியல் மறு ஒளிபரப்பு எனும்போது, அப்பவே அவ்ளோ பொறுமை தேவைப்பட்டது.. இப்போ? அதனால சீரியல் பக்கம் பலருக்கும் நாட்டம் போகவில்லைதான்... என்றாலும், முல்லை கதிர் ஜோடி காட்சிகளுக்காக சீரியலை பார்க்க உட்காருகிறார்கள்.

அடுத்து என்ன?
அடுத்து என்ன என்று தெரியாமல் இருக்கும்போதே சீரியலை இழுத்தடிப்பார்கள். ஏதோ தெரிஞ்சுக்கணும் என்கிற ஆவலில் தொடர்ந்து சீரியலை பார்த்து வந்தார்கள். இப்போ மறு ஒளிபரப்பில் அடுத்து என்ன நடக்கப் போகிறடகு என்று தெரிந்து சீரியலை பார்க்கும்போது அட...இவ்ளோ ஜவ்வாவா இழுத்து இருக்காங்க..என்ன கொடுமைடா என்று நினைக்கத் தோன்றுகிறது.

முல்லைக்கு கதிர் சாப்பாடு
முல்லை சாப்பிடாமல் படுத்துக்கொள்கிறாள். கதிர் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடுன்னு சொல்லி கொடுக்கிறான். ஆஹா.. ஆசையா நம்ம புருஷன் நமக்கு சாப்பாடு எடுத்து வந்து தருகிறான் என்று முல்லையும் பசியில் லபக் லபக்கென்று சாப்பிட்டு விடுகிறாள்.

எனக்கு மட்டும்தானே
ஏங்க.. வேற யார் பசியோட இருந்து இருந்தாலும் இவ்ளோ வருத்தப்பட்டு இருக்க மாட்டீகதானே.. எனக்கு மட்டும்தான் உங்க வருத்தம் இல்லன்னு கேட்கிறாள். இல்லையே.. கடையில குமரேசன் மாமா சாப்பிடலேன்னு தெரிஞ்சா கூட கொண்டு போயி குடுத்து இருக்கேன்.. ஏன்..ஊட்டி கூட விட்டு இருக்கேன்னு சொல்றான்.

ஓ..அப்படி வரிய
ஓ..நீங்க அப்படி வரியன்னு முல்லை கேட்க...ஆமாம் என்பது போல கதிரும் தலையாட்டறான். அப்போ எனக்கு மட்டும்தான் நீங்க செய்யறியன்னு நான் நினைச்சு சாப்பிட்டது தப்புன்னு சொல்றா முல்லை. நான் உன்னை அப்படி நினைக்க சொன்னேனா என்று கதிர் கேட்க...இவ்ளோ அவமானம் உனக்குத் தேவையா முல்லை.. தேவையா என்று கேட்டு வடிவேலு பாணியில் முல்லை தன்னைத்தானே நொந்துக்கறா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications