பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா பற்றி கதிருக்கு தெரிந்த உண்மை, அதிர்ச்சி கொடுத்த செந்தில்.. பாண்டியன் நிலைமை பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா கதிரிடம் ஏமாற்றிய விஷயம் செந்தில் மூலமாக கதிருக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் தன்னுடைய தந்தையிடம் செந்திலுக்காக மீனா வாக்குவாதம் செய்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாண்டியன் கடையில் இருக்கிறார். அப்போது செந்திலை கோபத்தில் திட்டிக்கொண்டே இருக்கிறார். உன்கூட படித்தவன் எல்லாம் கூலி வேலை செஞ்சுட்டு இருக்காங்க உன்னை நாங்க அப்படியா வச்சிருக்கோம்? என்று கேட்க, அவமானத்தில் செந்தில் எதுவும் பேச முடியாமல் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் கோமதியும் தங்கமயிலும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது என்னுடைய பிரசவ நேரத்தில் தான் எனக்கு பக்கத்தில் யாருமே இல்ல. ஆனா என் மருமகளுக்கு நான் பட்ட கஷ்டத்துல ஒரு சதவீதம் கூட பட்டுவிடக்கூடாது அதனால உனக்கு என்ன வேண்டும் என்றாலும் நீ என்கிட்ட கேளு, உனக்காக நான் இருக்கிறேன் என்று சொன்னதும் தங்கமயில் சந்தோஷத்தில் எமோஷனல் ஆகிறார். அப்போது கதிர் வந்ததும் அவரிடம் கடைக்குப் போக வேண்டியது தானே என்று கோமதி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிறகு ராஜி வந்து ஒரு இடத்துக்கு போகணும் என்று கேட்க, கதிர் எங்கே என்று கேட்கிறார். வா சொல்லுறேன் என்று கதிரை வெளியே அழைத்து வருகிறார். பிறகு கதிரிடம் தனியாக பேசும் ராஜி எதற்கு மாமா கிட்ட சண்டை போடுறா என்று கேட்கிறார். அதற்கு நானும் அவரும் இப்படித்தான் அதெல்லாம் நீ கண்டுக்காத, உனக்கு இப்போ இருக்கிற ஒரே வேலை போலீஸ் ஆகிறது தான் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் மீனா தன்னுடைய அப்பா வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது செந்தில் காசு கொடுத்த விஷயம் பற்றி கேட்க அதற்கு மீனாவின் அம்மா அப்பா வெளியே போயிருக்கிறார் அவர் வந்த பிறகு கேளு என்று சொல்கிறார். பிறகு மீனாவின் அப்பா வந்ததும் அவரிடம் வேலை என்ன ஆச்சு என்று மீனா கேட்டதும் பணம் கொடுத்து ஒரு மாசம் கூட ஆகல அதற்குள் இப்படி கேட்க தொடங்கிட்ட? என்று சொல்லிவிட்டு இன்னும் மூன்று நாளில் கண்டிப்பாக நல்ல செய்தி வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக கதிரும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது அப்பா திட்டிய விஷயம் குறித்து செந்தில் புலம்பி கொண்டிருக்கிறார். இன்னும் பத்து நாளில் எல்லாம் சரியாகிவிடும் என நம்புவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது, அது எப்படி சரியாகும் அதுதான் மாமா கிட்ட கொடுத்த பணத்தை அண்ணி வாங்கிட்டாங்களே என்று கேட்க, அதை எப்படி அவ வாங்குவா? அதெல்லாம் வாங்கவே முடியாது என்று செந்தில் சொன்னதும் கதிர் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications