பாண்டியன் ஸ்டோர்ஸ்: போட்டோவை காட்டி மிரட்டும் குமரவேல்.. அரசி எடுத்த முடிவு! பாண்டியனுக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் மே 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அரசியை குமாரவேல் தவறாக எடிட் செய்த புகைப்படங்களை காட்டி பிளாக்மெயில் செய்கிறார். அரசியின் திருமணத்தை நிறுத்துவதற்காக குமாரவேல் போடும் பிளான் பற்றி அரசி குடும்பத்தினரிடம் சொல்லப் போகிறாரா? இல்லையா? என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தங்கமயில் பற்றிய உண்மைகள் சரவணனுக்கு தெரிய வந்திருக்கிறது. சரவணன் இனி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடைசியில் தங்கமயில் படிக்கவில்லை என்ற உண்மையையும் வழக்கம்போல பாண்டியனிடம் சொல்லாமல் மறைக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த உண்மையை தெரிந்தால் என்னுடைய அப்பா தாங்கிக்க மாட்டார் என்று சமாளித்திருக்கிறார்.
பாவம் தங்கமயில்
ஏற்கனவே தங்கமயில் ஹோட்டலில் வேலை செய்த விஷயத்தையும் சரவணன் மறைத்திருந்தார். அதேபோல இப்போது தங்கமயில் படிக்கவில்லை என்ற உண்மையையும் சொல்லப்போகிறது இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இனி கணவன் மனைவியாக நம்மால் வாழ முடியாது, உன் மீது இருந்த கொஞ்சம் பாசமும் எனக்கு போய்விட்டது என்று சரவணன் தங்கமயிலை மிரட்டி இருக்கிறார்.
எதிர்பார்க்காத சம்பவம்
தங்கமயில் ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக இருந்தாலும் இப்போது அனைவரும் ஐயோ பாவம் என்று சொல்லும் அளவிற்கு அனுதாபத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியான சம்பவம் கிடைக்கிறது. அரசியின் திருமணத்தை நிறுத்துவதற்காக குமாரவேல் எதுவும் பிளான் செய்வார் என்று தெரிந்ததுதான் ஆனால் இப்போது அவர் எடுத்த முயற்சி எதிர்பார்க்காத சம்பவமாக இருக்கிறது.
எடிட் போட்டோஸ்
அதாவது அரசியும் குமாரவேலுவும் எடுத்த புகைப்படங்களை குமாரவேலு தவறாக எடிட் செய்து வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை சுகன்யா அரசியிம் காட்டி நீ வேலை செஞ்சு வச்சிருக்கே? இப்படியுமா புகைப்படம் எல்லாம் எடுப்பீங்க என்று கேட்க அதை பார்த்து அதிர்ச்சியான அரசி நான் இப்படி எல்லாம் போட்டோஸ் எடுக்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
மிரட்டும் குமாரவேல்
பிறகு குமாரவேல் தான் பேசுறான் நீயே பேசிக்கோ என்று அரசியிடம் சுகன்யா போனை கொடுக்கிறார். போனை வாங்கி அரசி பேசும் போது இந்த போட்டோவை இனி நான் உங்க குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பப் போறேன், தெரு முழுக்க போஸ்டர் போட்டு ஒட்ட போறேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிறார். இதைப்பற்றி எப்படியாவது வீட்டில் சொல்ல வேண்டும் என்று அரசி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அரசி எடுக்கும் முடிவு
அந்த நேரத்தில் பாண்டியன் அரசியிடம் என்ன அரசி ஒரு மாதிரி இருக்க? உனக்கு கல்யாண ஏற்பாடு வேகவேகமாக நடப்பது பிடிக்கலையா? என்று விசாரிக்க உண்மையை சொல்வதற்காக அரசி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். உண்மையை சொன்னால் மொத்த குடும்பமும் குமார வேலுவை ஜெயிலுக்குள் தள்ளுவதற்கு முயற்சி செய்யும். ஆனால் இந்த சீரியலின் சில சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது, அந்த புகைப்படங்களில் குமாரவேல் மற்றும் அரசி இருவருமே மணக்கோலத்தில் இருக்கிறார்கள்.
அடுத்து நடப்பது இதுதான்
அரசி தனியாக ஏதோ ஒரு வீட்டில் இருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. இதனால் திருமண நேரத்தில் குமாரவேல் அரசியை கடத்திக் கொண்டு போவதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ இந்த திருமணத்தை வைத்து இன்னும் ஒரு சில வாரங்கள் சீரியலை பரபரப்பாகவே கொண்டு போகப் போகிறார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications