பாண்டியன் ஸ்டோர்ஸ்: அப்பாவால் பிரச்சினையில் சிக்கிய தங்கமயில்.. பாண்டியன் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நவம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடில் தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்து அவருடைய அப்பா பாண்டியனிடம் பேச தங்கமயில் புது பிரச்சனையில் சிக்குகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கோமதி தன் அம்மாவை ஹாஸ்பிடலில் போய் பார்த்ததும் அழுது புலம்பி இருந்தார். ஆனால் ராஜி பேசினாலும் அவருடைய அம்மா முகம் கொடுத்து பேசவில்லை. இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியாமல் இருந்தது. பிறகு கோமதி வந்த விஷயம் தெரிந்த அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டார்கள்.

அப்போது நெஞ்சுவலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லாரையும் திட்டி அனுப்பிவிட்டார். இன்னொரு பக்கத்தில் வீட்டில் கோமதி தன்னுடைய அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருகின்றார். அப்போது கோமதியின் அண்ணன்கள் வீட்டிற்கு வந்து கேவலமாக பேசி இருந்தார்கள்.
அப்போது பாண்டியனுக்கு எதுவும் புரியவில்லை. பாண்டியன் வந்துவிட்டதை தெரிந்து கொண்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பிறகு கதிர் அப்பத்தாவை பார்க்க போனது உண்மைதான் என்று சொல்ல முதலில் பாண்டியன் கோபப்பட்டார். அப்போது இதுதான் சந்தர்ப்பம் என்று கோமதியின் அண்ணன்கள் மேலும் அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே வந்த கோமதி எதுவும் பேச முடியாமல் இருந்தார். அப்போது கோமதிக்கு துணையாக பாண்டியன் சப்போர்ட் செய்து பேசி இருந்தார். அது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பக்கத்தில் தங்கமயில் அழுது புலம்ப சரவணன் அவரை சமாதானம் செய்தார்.
இது எல்லாம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்ல மறுநாள் காலையில் தங்க மயிலின் அப்பாவும் அம்மாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக தன் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார்.

பிறகு தங்கமயில் அப்பா அம்மா பெரிய பணக்காரர்கள் போல ஓவராக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதற்கு பாண்டியன் கோபப்பட்டார். பணத்திற்காக யாரும் பேசல, செய்த தவறை அப்பவே சொல்லி இருந்தால் இந்த அளவிற்கு வந்து இருக்காது என்று கோபப்பட, தங்கமயிலின் அப்பாவும் அம்மாவும் பாண்டியன் கோவப்பட்டதும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள்.
இதனால் பாண்டியன் அமைதியாகிவிடுகிறார். பிறகு நாங்கள் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைப்பதற்காக தான் கூப்பிட வந்தோம் என்று தங்கமயிலின் அப்பா கதையை மாற்றி இருந்தார். பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்திருந்தார். அதற்கு பிறகு சரவணன் தன் மாமனார் மாமியாரை பேசியதை பற்றி வருத்தப்பட பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

இன்னொரு பக்கத்தில் ராஜியும் மீனாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கதிரிடம் ராஜி சைக்கிளில் ஏற்ற சொல்லி கேட்கிறார். அடுத்ததாக கோமதி செய்த வேலையை சொல்லி அவருடைய அண்ணன்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் எப்படியாவது சக்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். இப்படியாக சீரியல் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications