பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 கதை இதுதானா..? இதனால்தான் கதை இப்படி போகுதா...?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடைந்ததும் அதைத் தொடர்ந்து ஒளிபரப்பாகும் சீசன் 2 கதை இதுவாகத்தான் இருக்கும் என்று தற்போது சில தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏற்கனவே தனத்திற்கு புற்றுநோய் இருப்பதால் இனி கதை எப்படி போகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வந்து அடுத்த பாகம் வந்தால் எப்படி இருக்கும் என்றும் சில மீம்ஸ்களும் பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பி கதையையும் மையமாகக் கொண்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

சமீப காலமாக இந்த சீரியலில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வருவது போன்ற கதை இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட சிறு மனகசப்பால் ஜீவா குடும்பத்தை விட்டு தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதைத் தொடர்ந்து கண்ணனும் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை கூட்டிக்கொண்டு தனி குடித்தனம் சென்று ஆடம்பர செலவு செய்து அடுத்தடுத்து பல பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யும்போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது. கதிர் கண்ணனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வந்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கண்ணன் லஞ்சம் வாங்கி இப்போது போலீஸில் கைதாகி இருக்கிறார். அதே நேரத்தில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் வந்திருக்கிறது. இப்படியாக இந்த சீரியலில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் தனம் மற்றும் மூர்த்திக்கு மட்டும்தான் இந்த சீரியலில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜீவா மற்றும் மீனாவிற்கு பெண் குழந்தை கயல் இருக்கிறார்.
இந்த நிலையில் கதிர் மற்றும் முல்லைக்கும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனுக்கும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவிற்கு வந்து விட்டால் இரண்டாவது பாகம் தொடங்கினால் கதை என்ன மாதிரி இருக்கும் என்று சில தகவல்கள் பரவி வருகிறது.

அந்த வகையில் புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் தனம் ஏற்கனவே ஆபரேஷன் செய்யாமல் நாளை கடத்திக் கொண்டிருப்பதால் பிரசவத்தின் போது தனம் இறந்து விடுவார் என்றும், தனம் இறந்த பிறகு குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விதமாக இரண்டாவது பாகம் வரலாம். அப்போது பாண்டியன் மட்டும் ஆண் குழந்தையாக இருந்து அவருக்கு நான்கு சகோதரிகள் இருக்கப் இருப்பது போல கதை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்கும் தன்னுடைய குடும்ப குடும்பத்தை பாண்டியன் ஒன்று சேர்ந்து தனம் இப்போது கட்டிக் கொண்டிருக்கும் புது வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது போன்று தான் இரண்டாவது பாகம் இருக்கும்.. தனம் இந்த சீசனில் தியாகிகளாக இருக்கும்போது அடுத்த சீசனில் பாண்டியன் தியாகியாக இருக்கப் போகிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications