பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்து “மீனா” கொடுத்த ஹிண்ட்.. சுத்த மோசம்.. இப்படி கூட பண்ணுவாங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் முடிவடைந்து விடும் என்ற ஒரு செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் அது குறித்த கேள்விக்கு மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா தன்னுடைய instagram பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு இந்த சீரியலின் கதை குறித்து ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. பலரும் அதை வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை மற்றும் கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷம் துக்கங்களை பற்றி விவரித்து கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண் படும் அவஸ்தைகள் குறித்து அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் கதை புரட்சிகரமாக இருந்தால் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இந்த சீரியலில் டிஆர்பி அதிகரிப்பதற்காக தனம் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் புற்றுநோயை மறைத்து மொத்த கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து மீனா மற்றும் முல்லைக்கு தெரிய வந்த நிலையில் அவர்களும் வீட்டிற்க்கே சொல்லாமல் தனத்திற்கு ஆபரேஷன் செய்து முடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பாண்டியன் ஸ்டோர் முடியப் போகுதா? என்று கேள்விக்குறியோடு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அப்படி இருக்கையில் ஒரு மனைவி மார்பக புற்றுநோய்க்காக மார்பகத்தை ஆபரேஷன் செய்து அகற்றிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய கணவருக்கு கூட இந்த விஷயம் தெரியாதாம். இது நம்புற மாதிரியா இருக்கு? என்று பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தனத்திற்கு புற்றுநோய் பாதித்திருந்ததும் ஆபரேஷன் செய்ததும் கதிருக்கு தெரிய வந்த நிலையில் கதிர் தன்னுடைய அம்மா ஸ்தானத்தில் தனத்திற்கு பணிவிடைகள் செய்கிறார்.
விரைவில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முழுவதும் புது வீட்டிற்கு போக இருக்கும் நிலையில் அதை முடிவடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே கதை தொடர்வது போன்று பயணிக்கிறதே என்று பலர் கருத்து கூறிவரும் நிலையில், இனியாவது கதையில் சுவாரசியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் நிஜமா என்ன மாதிரி சூழ்நிலைகள் நடக்குமோ அதை சீரியலில் கொண்டு வந்தால் இன்னும் இந்த சீரியல் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications