கைது செய்யப்படும் கண்ணன்.. ஐஸ்வர்யாவால் வந்த புது பிரச்சனை..தனம் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்காமலே உயர் அதிகாரியின் சூழ்ச்சியால் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் மாட்டுகிறார்.
அதே நேரத்தில் தனம் சீக்கிரமாக புது வீட்டுக்கு போக வேண்டும் என்று கிரகப்பிரவேச வேலைகளை அவசரப்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த தான் வாங்கிய புது டிவியை தான் இருக்கும் முல்லையின் வீட்டிற்கு கொண்டு வரச் சொல்லி கதிரிடம் கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூலை பன்னிரெண்டாம் தேதிக்கான எபிசொடின் ஆரம்பத்தில் பேங்கில் கண்ணன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் லஞ்சம் தருகிறேன் என்று சொல்லி கையெழுத்து போடுமாறு கேட்க, அதற்கு கண்ணன் மறுத்து விடுகிறார். அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்க கண்ணன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தாலும் கிளெர்க் அவரிடம் வந்து சமாதானமாக பேசுகிறார்.
ஆனாலும் உறுதியாக கண்ணன் இனிமே என்கிட்ட லஞ்சத்தை பத்தி பேசாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்கிறார். பிறகு தனம் தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து கிரகப்பிரவேசத்துக்கு வருமாறு கூப்பிடுகிறார். அப்போது பாண்டியன் பிறந்த போது கூட நீ வீட்டுக்கு வரல எப்ப தான் வர போற என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேலும் வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சுதா அதற்குள் கிரகப்பிரவேசம் வைக்க போறேன்னு சொல்ற என்று கேட்க, இல்லன்னா இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு அதை கொஞ்சம் கொஞ்சமா செஞ்சுக்கலாம் என்று தான் யோசிக்கிறோம். ஆனாலும் நீ கண்டிப்பா கிரகப்பிரவேசத்துக்கு வந்துரு என்று சொல்லி சமாளித்தபடி தனம் போனை வைக்கிறார்.
அதே நேரத்தில் பேங்கில் கண்ணன் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொன்னதை பார்த்த மேனேஜர் பிளான் போட்டு கண்ணன் டேபிளில் பணத்தை வைத்து விடுகிறார். தொடர்ந்து லட்சம் தருகிறேன் என்று முதலில் வந்த நபர் லஞ்ச ஒழிப்பு ஆபீசர்களை கூட்டிட்டு வந்து இவர் என்கிட்ட 25,000 லஞ்சம் வாங்கினார் என்று பொய் சொல்லி மாட்டி விடுகிறார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன் என்னிடம் பணமே கிடையாது வேணா செக் பண்ணி பாருங்க. என்கிட்ட 150 ரூபா மட்டும்தான் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்தவர்கள் எல்லோரும் செக் பண்ணி பார்க்கும்போது கண்ணன் டேபிலில் இருந்த பணம் கண்டெடுக்கப்படுகிறது. பிறகு கண்ணனை அரெஸ்ட் பண்ணி விசாரிக்க கூட்டிக்கொண்டு போகின்றனர். அதே நேரத்தில் முல்லை குழந்தையை வைத்து ஐஸ்வர்யா விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்ய முயற்சி செய்ய அங்கிருந்த ஆபீசர்ஸ் கண்ணன் கையில் இருந்த போனை பிடிங்கி விடுகிறார்கள். தொடர்ந்து முல்லையும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, கதிரை அனுப்பி தன் வீட்டில் இருந்த டிவியை எடுத்துட்டு வர சொல்லி இருப்பதாக ஐஸ்வர்யா சொல்ல, தனம் திட்டி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications