ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தி திட்டும் “அத்தாச்சி”.. மூர்த்தி எடுத்த முடிவு.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கிறார்.
ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை அவருடைய சித்தி மருத்துவமனையில் வைத்து திட்ட ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் கண்ணன் விஷயத்தில் கறாராக மூர்த்தி தன்னுடைய முடிவை சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஜூலை 15ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவிற்கு திடீரென்று வயிறு வலி வந்து விட்டதால் தனம், ஜீவா, மீனா மூவரும் அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்கிறார். இந்த நாள் வீட்டில் மூர்த்தி முல்லை கதிர் ஆகியோர் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது கதிர் கண்ணனை எப்படியாவது வெளியே எடுக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தனம் போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் சொல்ல, மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு ஐஸ்வர்யாவை பார்ப்பதற்காக கதிரும் முல்லையும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். அப்பொழுது ஐஸ்வர்யா கண்ணன் பற்றி விசாரித்து அழுகிறார்.
இதனால் கடுப்பான கஸ்தூரி அத்தாச்சி, உன்னால தான் கண்ணன் இவ்வளவு கடங்காரன் ஆனான், செய்றது எல்லாம் செய்துவிட்டு அழுதா எல்லாம் சரியாகிவிடுமா? என்று ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு திட்ட, ஐஸ்வர்யா மேலும் அழுது கொண்டிருக்க தனமும், முல்லையும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துகின்றனர்.
அந்த நேரத்தில் மீனாவும் ஜீவாவும் ஐஸ்வர்யாவையும் குழந்தையும் பார்த்துக் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே மூர்த்தியும் வருகிறார். பிறகு ஐஸ்வர்யா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். எப்படியாவது கண்ணனை வெளியில் எடுக்கும்படி கெஞ்சுகிறார். அதற்கு மூர்த்தி அவன் பண்ணுன தப்புக்கு நீயும் குழந்தையும் என்ன பண்ணுவீங்க என்று சமாதானப்படுத்துகிறார்.
இப்போது கதிர் நான் ஜெயிலுக்கு போய் கண்ணனை பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்ல, மூர்த்தி எதற்கு என்று திட்டுகிறார். அதற்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்ல வேண்டாமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம். அவன் என்ன சாதனை செஞ்சிட்டா போயிருக்கான் என்று திட்ட தனம் சப்போர்ட் பண்ணி அவர்களை அனுப்பி வைக்கிறார்.
ஜெயிலுக்கு வந்த கதிர் மற்றும் ஜீவா கண்ணனிடம் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்கின்றனர். இதைக் கேட்டு கண்ணன் சந்தோஷப்பட்டு பிறகு அழுகிறார். நான் செய்த தப்புக்கு எல்லாம் தண்டனையா தான் என்னுடைய குழந்தையை என்னால் பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி பேசிக்கொண்டு இருக்க, வீட்டிற்கு வரும் கதிர் எப்படியாவது கண்ணனை வெளியே எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications