தனம் நோய் பற்றி முல்லையிடம் சொன்ன மீனா.. அதிர்ச்சியில் கதிர்.. இனி நடக்கப் போவது இது தானா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு முல்லைக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நிலையில் தனம் செய்வதை பார்த்து கோபமான மீனா தெருவில் தனியாக புலம்பி கொண்டு போவதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார்.

அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மூர்த்தி வெளியில் இருந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது கதிரும் ஜீவாவும் மூர்த்திக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, மூர்த்தி கண்ணன் லஞ்சம் வாங்கியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனை சரியாத்தானே வளர்த்தோம்.
ஆனால் அவன் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கவலைப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் கிச்சனில் தனம் சமைத்துக் கொண்டிருக்க கண்ணன் தனத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அண்ணி நீங்க என்ன சரியாத்தான் வளர்த்தீங்க. நான் தான் தப்பு பண்ணிட்டு இருக்கேன். இனிமேல் இந்த தப்பை பண்ண மாட்டேன் என்று சொல்லி கதறி அழ, கதிர் கண்ணனை சமாதானப்படுத்துகிறார்.
பிறகு தனத்தின் அண்ணன் வந்து தனத்திடம் ஹாஸ்பிடல் போறியா? என்று கேட்க, தனம் முதலில் பயப்படுகிறார். பிறகு செக்கப் போறியா என்று கேட்ட போது தான் சந்தோஷப்படுகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தனம் எனக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பணம் வேண்டும். உன்னால் தர முடியுமா? கொஞ்சம் அவசரம் என்று கேட்க, அவர் வீட்டு வேலைக்கா என்று கேட்க? அதை பிறகு சொல்றேன். நீ எனக்கு பணத்தை கொடு என்று தனம் கறாராக கேட்கிறார்.
அதற்கு அவர் சரி என்று சொன்னதும் என் பெயரில் இருக்கிற அந்த இடத்தை நீ வச்சுக்கோ. இடத்தை வச்சிட்டு எனக்கு பணத்தை தந்தால் போதும் என்று தனம் அண்ணனிடம் வாக்குவாதம் செய்ய, முதலில் மறுத்த அவருடைய அண்ணன் பிறகு சரி என்று சம்மதிக்கிறார். அடுத்ததாக மீனா தனத்திடம் எப்போ ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறோம்? எப்போ வீட்டில இந்த பிரச்சனையை பற்றி சொல்ல போறோம்? என்று கேட்க புது வீட்டுக்கு போனதுக்கு பிறகு ஆபரேஷன் பண்ணிக்கலாம் என்று தனம் சொல்ல மீனா கோபம் ஆகிறார்.
இப்போதைக்கு நாம அங்க போற மாதிரி தெரியல. வீட்ல சொல்லிரலாம் என்று மீனா திட்ட, அதற்கு தனம் வேணாம் நானே சொல்லிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா நீங்க சொல்லலனா நானே சொல்லிடுவேன் என்று சொல்ல, அந்த நேரம் உள்ளே வந்த முல்லை அக்கா கிட்ட என்ன நீங்க கேக்குறீங்க? சண்டை போடுறீங்களா? என்று கேட்க மீனா அங்கிருந்து ஒன்றும் இல்லை என்று சமாளித்தபடி வெளியே வந்து தெருவில் புலம்பிக்கொண்டே வருகிறார்.
தெருவில் மீனா புலம்பி கொண்டு போவதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை எபிசோட்டுக்கான பிரமோ வெளியானது. அதில் முல்லை மீனாவிடம் சென்று விசாரிக்க மீனா அக்காவுக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என்று சொல்ல முல்லை அதிர்ச்சி அடைகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications