தனம் இறப்பதற்குள் அவசர அவசரமாக வளைகாப்பு.. கோபத்தில் திட்டும் ஜனார்த்தனன்.. கண்ணனின் லூசுத்தனம்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சொல்லி அவசர அவசரமாக அதை நடத்துகிறார். மீனா தன்னுடைய அப்பா அம்மாவிடம் எனக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்து விட்டால் நீங்கள் என்ன பண்ணுவீங்க என்று கேட்க அனைவரும் கோபமாகி திட்டுகின்றனர்.
மீனா தன்னுடைய அப்பா அம்மாவிடம் எனக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்து விட்டால் நீங்கள் என்ன பண்ணுவீங்க என்று கேட்க அனைவரும் கோபமாகி திட்டுகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா தன்னுடைய வீட்டில் அம்மா அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜனார்த்தனன் தன்னுடைய நண்பர் ஒருவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது, அவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறது. அதனால் என் நண்பன் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மீனா எனக்கும் அந்த மாதிரி குணப்படுத்த முடியாத அளவிற்கு நோய் வந்துட்டா என்ன பண்ணுவ ஜீவா? என்று கேட்க ஜீவா நான் நீ காலையில் எனக்கு மாத்திரை தந்துட்டு போன மாதிரி தந்துட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருவேன் என்று கூறுகிறார். பிறகு மீண்டும் மீனா அதுபோலவே பேசிக்கொண்டே இருக்க கடுப்பான ஜனார்த்தனன் மீனாவை திட்டுகிறார். அப்படி மட்டும் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என் கதையை முடித்து விடுவேன் என்று கூறுகிறார்.
அதற்கு ஜீவாவும் மீனாவின் அம்மாவும் மீனாவை திட்டுகின்றனர். இப்படி எல்லாம் தேவையில்லாத விஷயத்தை பேசிட்டு இருக்க கூடாது என்று கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து தனம் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு வைத்து கொடுத்து கொண்டு இருக்க, ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நாளை மறுநாளே வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு எல்லோரும் சம்மதம் சொல்ல முதலில் ஐஸ்வர்யா வேண்டாம் என்று கூற, பிறகு அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி சரி என்று சம்மதிக்க வைக்கின்றனர்.

பிறகு மீனாவும் ஜீவாவும் பேசிக்கொண்டு இருக்க நான் அக்கா வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்ல, எதுக்காக அடிக்கடி அங்க போற என்று ஜீவா கேட்க, அங்க முல்லைக்கு குழந்தை பிறந்திருக்கு.. அக்கா மாசமா இருக்காங்க. ஐஸ்வர்யாவும் மாசமா இருக்கா. நான் போனா ஏதாவது உதவியா இருக்கும் என்று சொல்லி, நாம அவங்க வீட்டுக்கு போகிறலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜீவா நானும் எல்லாரையும் மிஸ் பண்றேன். பாப்போம் என்று ஜீவா கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து முல்லையும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் நடவடிக்கை இப்ப எல்லாம் நார்மலாக இல்லை என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தனம் மூர்த்தியிடம் நாம எப்போ புது வீட்டுக்கு போக போறோம்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மூர்த்தி வீட்டு வேலை இன்னும் முடிவடையவில்லை என்று கூறுகிறார். அதற்கு சீக்கிரமாக வீட்டு வேலையை முடிங்க. நம்ம அங்க போகணும் என்று கோபமாக சொல்ல மூர்த்தி பதறிப் போகிறார்.

பிறகு மூர்த்தியை சமாதானம் செய்யும் வகையில் தனம் பொய் சொல்லி ஒவ்வொரு காரணங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் வளைகாப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஸ்டேஜில் உட்கார்ந்த கண்ணன் youtube-ல் பேசி வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போது மீனா அதைப் பார்த்து நாம் எப்படியாவது இன்னைக்கு சொல்லிரனும் என்று சொல்லிக் கொண்டிருக்க, பார் இவ்வளவு சந்தோசமாக எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. இதை எல்லாம் உனக்கு கெடுக்கணுமா? போ.. வேணா போய் சொல்லு.. என்று தனம் மீனாவை மிரட்டுகிறார்.












Click it and Unblock the Notifications