பாண்டியன் ஸ்டோர்ஸ்: கண்ணன் வேலைக்கு ஆப்பு வைத்த மேல் அதிகாரி.. முடிவுக்கு வந்த தனத்தின் நாடகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அவர் மாட்டிவிட்ட மேல் அதிகாரி கண்டுபிடித்து விடுகிறார்.

கண்ணனுக்கு பிரச்சனை செய்வதற்காக மேல் அதிகாரி கண்ணன் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் வளைகாப்பு பங்க்ஷன் சந்தோஷமாக முடிவடைந்து இருக்கிறது.

Pandian Stores serial 2023 July 3th Episode full Kannan is the superior officer problem to job

அதே நேரத்தில் மீனா நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ஜீவாவிற்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தனமும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் பங்க்ஷனில் எடுத்த போட்டோஸ் வீடியோக்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த மீனா ஃபீல் பண்ணுகிறார். பிறகு சீக்கிரமா இந்த விஷயத்தை பற்றி வீட்டில் சொல்லணும் நீங்க எப்போ ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறீங்க அக்கா என்று மீனா கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.

தனம் தனக்கு புது வீட்டில் எல்லாரும் ஒன்றாக வாழ்வதை பார்க்க வேண்டும் என்று சொல்ல மீனா இப்படியே ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி நீங்க தள்ளி போட்டுட்டு இருக்கீங்க, நான் போய் சொல்றேன் என்று கூறுகிறார். அதற்கு தனம் கடுப்பாகி மீனாவை திட்டி விடுகிறார். அதனால் மீனா கோபமாக நான் இப்பவே சொல்கிறேன் என்று வீட்டை விட்டு வெளியே வருகிறார். வெளியே எல்லோரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Pandian Stores serial 2023 July 3th Episode full Kannan is the superior officer problem to job

எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த மீனா பாதியிலேயே நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் தனம் பார்த்தியா எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க. இதை நீ கெடுக்க போறியா? என்று கேள்வி கேட்க, மீனா அமைதியாக நிற்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் கண்ணன் வேலை பார்க்கும் பேங்கில் கண்ணனை தேடிக் கொண்டு ஒரு நபர் வருகிறார். அவரிடம் கிளர்க்கு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு எனக்கு கண்ணன் சார் கையெழுத்து போட்டு தந்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் லோன் கெடச்சிட்டு அதுபோல என் பிரண்டுக்கு பண்ணனும் பணம் கொஞ்சம் கூடுதல் ஆனாலும் தருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க கண்ணன் மாட்டிக் கொடுத்த மேல் அதிகாரி இதை கேட்டு விடுகிறார். பிறகு கிளர்க் இடம் விசாரிக்க, கண்ணன் பணம் வாங்கியதை சொல்லிக் கொடுக்க, அப்படியா இருக்கட்டும் அவனுக்கு என்று கூறிவிட்டு செல்கிறார்.

Pandian Stores serial 2023 July 3th Episode full Kannan is the superior officer problem to job

அதைத்தொடர்ந்து மீனா மீண்டும் தனியாக சென்று தனத்திடம் எப்படி அக்கா உங்களால எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது என்று கேட்டு அழுது கொண்டு இருக்க, அந்த நேரம் ஜீவா வந்து போகலாமா? என்று கேட்க மீனா போகலாம் என்று சொல்லிவிட்டு முல்லையிடம் சொல்லிட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார். ஜீவாவிடம் மீனா சரியாக பேசாமல் போவதை பார்த்து ஜீவா தனத்திடம் அவளுக்கு என்ன ஆச்சு அண்ணி? எப்போதும் பேசிட்டு இருப்பா இப்போ இப்படி பண்றா என்று கேட்கிறார்.

நானும் இப்ப ரெண்டு மூணு நாளா பார்த்துகிட்டே இருக்கேன். மீனா நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்ல. மீனா ஏதோ மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு வெளியே சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க ஏதாவது அவகிட்ட பேசி சரி பண்ணுங்க என்று சொல்ல, தனம் அதுவெல்லாம் ஒன்னும் இல்ல. நான் அவ கிட்ட பேசிட்டேன். அவ இவ்ளோ நேரம் இங்கு இருந்து வீட்டிற்கு கிளம்பி போறது பிடிக்கலைன்னு சொல்றா. அவ்வளவுதான் என்று ஜீவாவை சமாதானப்படுத்துகிறார்.

Pandian Stores serial 2023 July 3th Episode full Kannan is the superior officer problem to job

அதைத்தொடர்ந்து அனைவரும் போன பிறகு மூர்த்தியிடம் தனம் நாம எப்ப மாமா புது வீட்டுக்கு போக போறோம் என்று கேட்க, வீட்டு வேலை இன்னும் முடியல, இங்க வீட்டில் பங்க்ஷன் இருந்ததால நான் அங்க போய் பார்க்க முடியல போயிடலாம் என்று சொல்ல, இல்லை எனக்கு ரொம்பவே சீக்கிரமா போகணும் என்று தனம் அவசரப்படுத்த, முல்லை எதுக்கு அக்கா இவ்வளவு அவசரப்படுறீங்க? என்று கேட்க, தனமும் மூர்த்தியும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+