மீண்டும் குடும்பத்தை ஏமாற்றும் ஐஸ்வர்யா..கடுமையாக திட்டும் மூர்த்தி..ஜீவாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா வளைகாப்புக்கு எப்படி பணம் செலவளித்தாங்க என்று முல்லை தனத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது.
நாங்கள் வேறு எந்த கடனும் வாங்கவில்லை என்று ஐஸ்வர்யா பொய் சொல்ல அதையே கண்ணனும் கூறுகிறார்.
மேலும் வீட்டில் சாப்பிடும்போது வீடியோ எடுத்ததால் மூர்த்தி கடும் கோபத்தில் ஐஸ்வர்யாவை திட்டி விடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 10ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவிடம் எப்படி வளைகாப்புக்கு பணத்தை செலவழிச்சீங்க என்று முல்லை கேள்வி கேட்க ஐஸ்வர்யா பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

பிறகு மண்டபத்திற்கு கொடுத்த பணத்தை திருப்பி தந்தாங்களா? என்று கேட்க, அப்படி தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, உங்களுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது. கிரெடிட் கார்டில் மட்டும் இல்லாம வேற யார்கிட்டயும் நீங்க கடன் வாங்குனீங்களா? என்று தனம் கேள்வி கேட்க ஐஸ்வர்யா அப்படி எல்லாம் இல்லை என்று பொய் சொல்கிறார்.
தனம், மீனா, முல்லை என மூவரும் மாறி மாறி கேட்டாலும் ஐஸ்வர்யா நாங்க வேற யார்கிட்டயும் கடன் வாங்கல. நாங்க வச்சிருந்த சேமிப்பு மூலமா தான் செலவு செஞ்சோம் என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து கண்ணன் வீட்டிற்கு வர தனம் கண்ணனிடம் இதே கேள்வியை கேட்க கண்ணனும் ஐஸ்வர்யா சொன்ன மாதிரியே நாங்க வேற கடன் வாங்கலனு ஏமாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து மூர்த்தி வீட்டிற்கு சாப்பிட வர தனம் கண்ணன் ஐஸ்வர்யாவையும் சாப்பிட கூப்பிடுகிறார். முதலில் மூர்த்தி திட்ட ஆனால் கண்டுகொள்ளாமல் கண்ணன் வந்து சாப்பிட்டு கொண்டு மூர்த்தி இடம் பேச பார்க்கிறார். மூர்த்தி முகத்தை திருப்பிக் கொண்டு கடுப்பாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஐஸ்வர்யா வழக்கம் போல ஹலோ பிரண்ட்ஸ் என்று தொடங்கி தன்னுடைய யூடியூப் சேனலில் தான் சாப்பிடும் விஷயத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க அதனால் கடுப்பாகும் மூர்த்தி ஐஸ்வர்யாவை திட்டுகிறார். இப்படி எல்லாம் வீடியோ எடுக்காதன்னு எத்தன வாட்டி சொல்லணும் உங்களால் நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டீங்களா என்று திட்டிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு தனமும் உன்கிட்ட நாங்க சொல்லதானே செஞ்சிருக்கோம். எதுக்காக இப்படி மாமா முன்னாடியே வீடியோ எடுத்துட்டு இருக்க என்று திட்டுகிறார். கண்ணனை நான் பேசுகிறேன் என்று கூறி தனத்தை சமாதானப்படுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து மீனாவும் ஜீவாவும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் வந்து சில கார் புகைப்படங்களை காட்டி இதில் எது புடிச்சிருக்குன்னு சொல்லுங்க என்று சொல்ல, மீனாவும் ஜீவாவும் ஒரு காரை பார்த்து இது நல்லா இருக்கு என்று சொல்கின்றனர். இதே காரை தான் நான் புக் பண்ணி இருக்கிறேன். அது உங்களுக்குத்தான் என்று ஜனார்த்தனன் சொல்ல ஜீவாவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து நாளைய எபிசோட்டுக்கான ப்ரோமோவில் கதிர் முல்லை நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஹோட்டலில் ஏற்கனவே பிரியாணியில் கரப்பான் பூச்சி கலந்த நபர் பைக்கில் வந்து முல்லையில் வயிற்றில் இடித்து விட முல்லை வயிறு வலியில் துடிக்கிறார்.












Click it and Unblock the Notifications