"அந்த” பிரச்சனைக்காக பயப்படும் தனம்.. வீட்டிற்கு வந்து "மிரட்டும்” மீனா இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெஞ்சு வலியில் அவதிப்படும் தனம் வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு செல்கிறார்.
அங்கே டாக்டர் நெஞ்சில் கட்டி இருக்கிறது என்று சொல்ல தனம் பயத்தில் கண் கலங்குகிறார்.

அதே நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்த மீனா தனத்தை பற்றிய உண்மையை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் தனம் ஹாஸ்பிடலுக்கு போறதுக்காக கிளம்பி ஐஸ்வர்யா மற்றும் முல்லையிடம் ரமணி சித்தி வந்திருக்காங்க. அவங்கள பார்க்க போறேன் என்று சொல்ல, அதைக் கேட்ட முல்லையின் அம்மா சாயங்காலம் போகலாம் இப்போ வெயில் அதிகமாக இருக்கு என்று சொல்கிறார்.
அதற்கு தனம் இல்ல சித்தி பரவாயில்ல அவங்க அவசரமா வர சொன்னாங்க அதுதான் போறேன் என்று வேகமாக கிளம்புகிறார். அப்போது மூர்த்தியும் அந்த நேரம் வீட்டிற்கு வந்து விட எங்க போற தனம் என்று கேட்க, சித்திய பார்க்க போறதாக தனம் சொல்ல மூர்த்தி நான் கொண்டு போய் விடுகிறேன் வா என்று கூப்பிடுகிறார்.
அதற்கு வேண்டாம் உங்களுக்கு கடையில் வேலை இருக்கும் நீங்க போங்க நான் ஆட்டோவில் போகிறேன் என்று தனம் உறுதியாக சொல்ல, பிறகு வெளியில் இருந்த ஆட்டோவை கூப்பிட்டு மூர்த்தி தனத்தை அவங்க சித்தி வீட்டில் இறக்கி விட சொல்ல, மூர்த்தி கிளம்பியதும் ஆட்டோக்காரரிடம் தனம் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும் என்று சொல்லி அங்கே போய் சேருகிறார்.
அதைத்தொடர்ந்து ஹாஸ்பிடலில் தனம் இருக்கும்போது அங்கே மீனா தன்னுடைய அம்மாவுடன் சொந்தக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக வருகிறார். மீனாவை பார்த்ததும் தனம் ஒழிந்து கொள்கிறார். வீட்டில் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நம்ம இங்க வந்தா இங்க இவ வேற வந்து இருக்காளே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். பிறகு டாக்டரை மீனாவிற்கு தெரியாமல் போய் பார்க்கிறார்.
அப்போது டாக்டர் உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? என்று தெரியவில்லை அதற்காக ஒரு செக்கப் பண்ணினால் மட்டும் போதும் என்று சொல்ல தனம் பயந்து கொண்டே வெளியில் வந்து நிற்கிறார். வெளியில் தனம் யோசித்துக் கொண்டு நிற்கும்போது அந்தப் பக்கமாக மீனா வந்து என்னவென்று கேட்கிறார். அப்போது தனம் ஒன்றும் இல்லை செக்கப்பிற்கு வந்ததாக சொல்கிறார்.
பிறகு சமாளித்தபடி தனம் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வேகமாக செல்ல தனத்தின் முகம் சரியில்லை என்பதை புரிந்த மீனா சந்தேகப்பட்டு டாக்டரிடம் சென்று கேட்கிறார். டாக்டர் உண்மை எல்லாம் சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தொடர்ந்து நாளைக்கு எபிசொட்டில் மீனா தனத்தை நேரில் சென்று பார்த்து உங்களுடைய நிலைமை பற்றி எனக்கு எல்லாம் தெரியும். டாக்டர் என்கிட்ட சொல்லிட்டாங்க. வாங்க செக்கப் போகலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு தனம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய கூடாது என்று வேண்டுகோள் வைக்கிறார். இதைத் தொடர்ந்து தனத்திற்கு என்ன பிரச்சனை என்பது அடுத்த வாரம் தெரிய வரும்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications