லஞ்சம் வாங்கி மாட்டிகொள்ளும் கண்ணன்.. உண்மையை மறைக்கும் மீனா.. பரபரப்பின் உச்சம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் மீண்டும் லஞ்சம் வாங்குகிறார். அதே நேரத்தில் அவர் மாட்டிவிட்ட மேல் அதிகாரி மீண்டும் வேலைக்கு வருகிறார்.
இந்த நிலையில் தனத்திற்கு புற்றுநோய் இருப்பது மருத்துவர்கள் கன்பார்ம் செய்து கூறுகின்றனர். இதை தனம் வீட்டில் இருப்பவர்களிடம் மறைக்கிறார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 26 ஆம் தேதி எபிசோடு என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கண்ணன் பேங்கில் இருக்கும்போது கிளர்க் அவரிடம் சில பைல்களை கொடுத்து கையெழுத்து வேண்டும் என்று கேட்க, மொத்தமாக கொண்டு வந்து இருக்கீங்க என்று கேட்டபடி கண்ணன் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கட்டு ரூபாயை அந்த கிளர்க் கண்ணனிடம் கொடுக்க, வேண்டாம் என்று மறுக்கும் கண்ணன் பிறகு ஐஸ்வர்யாவின் சித்தி பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கிறார்.
பிறகு அதை வாங்கி வைத்துக் கொண்டு இனி இப்படி எதுவும் பணம் தர வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்க, அந்த நேரத்தில் கண்ணன் ஜெயிலுக்கு அனுப்பிய அவருடைய பெண் மேலாளர் மீண்டும் பேங்குக்கு வருகிறார். அவரைப் பார்த்த கண்ணன் அதிர்ச்சியாகி என்ன இவங்க மீண்டும் வந்திருக்காங்க என்று கேட்க உங்களுக்கு தெரியாதா அவங்க நேத்து ஜாயின் பண்ணிட்டாங்க என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து தனம் வீட்டில் யோசித்தபடியே இருக்க அப்போது தனம் குழப்பத்தில் இருப்பதை ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் கேள்வி கேட்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த கண்ணனும் நானும் பார்க்கிறேன். உங்க முகம் சோகமாக தான் இருக்கு என்று சொல்ல தனம் கோபப்படுகிறார்.
அப்போது வீட்டிற்கு வந்த மூர்த்தி தனத்திடம் பணம் கேட்க என்கிட்ட பணம் தந்தீங்களா? என்று கேட்க பிறகு முல்லை உங்ககிட்ட தான் தந்தாங்க என்று சொல்ல, பீரோ சாவி உன்கிட்ட இருக்கா என்று தனம் கேட்க பீரோ ஜாவி எப்பவும் உங்க பர்ஸில் தானே இருக்கும் என்று தனம் சொல்ல, அப்படியா என்று தனம் யோசிக்க நீங்க நல்லா தானே இருக்கீங்க என்று மீண்டும் முல்லை கேட்க, அதைத்தொடர்ந்து மூர்த்தியும் தனத்திடம் கேள்வி கேட்க தனம் கோபமாகி உள்ளே போகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா வீட்டில் யோசித்தபடியே இருக்க அப்போது அங்கு வரும் ஜீவா மீனாவிடம் தனம் அண்ணியை பார்த்தியாமே அண்ணி எப்படி இருக்காங்க என்று கேட்டுக் கொண்டிருக்க, மீனா தனம் உடல்நிலை பற்றி சொல்லுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு வேண்டாம் என்று நினைத்தபடியே இருக்க கயல் பாப்பா உடன்பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நாள் காலையில் தனமும் மீனவும் ஹாஸ்பிடலில் இருக்க டெஸ்ட் ரிப்போர்ட்டை மீனா வைத்திருக்க தனம் அதை என்னிடம் கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்க மீனா வேண்டாம் ஒன்னும் இருக்காது நான் டாக்டர் கிட்டயே கொடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். பிறகு தனம் எனக்கு ஏதாவது இருக்குமோ என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
அடுத்ததாக டாக்டரிடம் இருவரும் போக டாக்டர் டெஸ்ட் ரிப்போர்ட்டை ரொம்ப நேரமா பார்த்தபடி இருக்க மீனா என்ன ஆச்சு மேடம் என்று கேட்க, அதற்கு உங்க ஹஸ்பண்ட் வரலையா? என டாக்டர் கேட்க இல்ல நீங்க எதுனால எங்க கிட்டயே சொல்லுங்க என்று கேட்க, உங்களுக்கு நெஞ்சு வலிக்க தொடங்கியதும் நீங்க அப்பவே வந்து இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று டாக்டர் சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications