ஆபத்தான நிலையில் தனம்.. டாக்டர் சொன்ன குட் நியூஸ்.. ஜீவா கேட்ட கேள்வி.. சந்தேகப்படும் பார்வதி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனத்திற்கு புற்றுநோய் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவர் கன்பார்ம் செய்கின்றனர்.
அதைத் தொடர்ந்து தனம் மற்றும் மீனாவின் நடவடிக்கைகளை ஜீவா, முல்லையின் அம்மா என அனைவரும் சந்தேகம் படுகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் தனமும் மீனாவும் டாக்டர் முன்னாடி அமர்ந்திருக்க, டாக்டர் ரொம்பவே யோசித்தபடியே ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்து பயந்து போன மீனா என்னாச்சு டாக்டர் இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்கீங்க என்று கேட்க நீங்க தனத்திற்கு நெஞ்சுவலி தொடங்கிய நேரத்திலே வந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.
ஆமா தனத்துக்கு இப்போ புற்றுநோய் பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் இருக்கிறார் அதே நேரத்தில் இதை குணமாக்கவும் முடியும். பலர் இந்த அளவிற்கு கூட வரமாட்டார்கள் நான்காவது ஐந்தாவது ஸ்டேஜ்ஜில்தான் மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்களுக்கு கூட நாங்கள் சரி பண்ணி இருக்கிறோம் என்று ஆறுதல் படுத்த தனம் அந்த இடத்தை விட்டு எழுந்து நின்று கதறி அழுகிறார்.
பிறகு தனமும் மீனாவும் ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்து அழுதபடியே பேசிக் கொண்டிருக்கின்றனர். மீனா தனத்தை சமாதானபடுத்திக் கொண்டு இனி அடுத்த தடவை வருவதற்கான அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வருகிறேன் என்று கிளம்பி போக தனம் ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். பிறகு மீனா வந்ததும் மீனாவிடம் நான் செத்துப் போயிருவேன் என்று கூட பயப்படவில்லை மீனா ஆனா நான் போன பிறகு இந்த குடும்பம் என்ன ஆகும்னு நெனச்சு தான் பயமா இருக்கு.
இந்த குழந்தையோட முகத்தை கூட நான் பாக்காம போயிருவேன்னு பயமா இருக்கு, மாமா இதை எப்படி தாங்கிக்க போறாருன்னு தெரியல, பாண்டியனை நான் தவிக்க விட்டுட்டு போயிருவேன்னு பயமா இருக்கு என்று அழுது கொண்டிருக்க மீனா தனத்திற்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து வருகிறார். மீனா வீட்டிற்கு வரும்போது அங்கே ஜீவா வீட்டில் இருக்க இவர்கள் இருவரையும் பார்த்து ஜீவா எங்கே போயிட்டு வரீங்க என்று கேட்கிறார்.
பிறகு இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்ல, குழந்தை நல்லா இருக்கா? நீங்க நல்லா இருக்கீங்களா? என்று ஜீவா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க தனம் முகம் வாடி போகிறது. அதே நேரத்தில் மீனாவின் அம்மாவும் வந்து அதையே கேட்க மீனா கடுப்பாகி மீனா அம்மாவை திட்டுகிறார்.
பிறகு மீனாவிடம் தனம் இதை பத்தி வீட்டில யாருகிட்டயும் எதுவும் சொல்லக்கூடாது மீனா என்று சத்தியம் வாங்குகிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு தனத்தை கூட்டிக்கொண்டு மீனா வர அங்கே முல்லையின் அம்மாவும், முல்லை, ஐஸ்வர்யா மூவரும் குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் முல்லையின் அம்மா பார்வதி எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க மீனா திணறுகிறார்
பிறகு ஒரு வழியாக சமாளித்தபடியே நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்றோம் என்று மீனா சொல்ல, உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது ஏதோ வித்தியாசமா இருக்குது. இப்ப எல்லாம் நீங்க நடந்துக்கிறதை பாக்கத்தாலே ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கிறது என்று முல்லையின் அம்மா கேள்வி கேட்க, மீனா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications