ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணுதது தப்பு..கண்ணன் அதிரடி.. மூர்த்தி செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணன் மட்டும் என் கையில் மாட்டுனா அவ்வளவு தான் என முல்லை அம்மா திட்டுகிறார்.

நான் உன்னை திருமணம் செய்தது தப்பு என்று கண்ணன் சொன்னதை கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி ஆகிறார்.

மூர்த்தி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தன் கையாலே சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

Pandian Stores serial 2023 June 2th Episode full update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் இரண்டாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கதிர் வீட்டிற்கு வந்ததும் முல்லை அழுது கொண்டு இருக்க அனைவரும் சமாதானம் படுத்துகின்றனர். பிறகு முல்லை அம்மா இதுக்கு எல்லாம் காரணம் கண்ணன் தான். அவன் என் கையில் கிடைக்கட்டும் நல்ல நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்பேன் என்று திட்டுகிறார்.

அப்போது தெருவில் நின்றபடி கண்ணன் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க ஜீவா கண்ணன் பாவம் அண்ணி என்று சொல்ல, தனம் கண்ணனை வீட்டிற்கு வா என்று கூப்பிட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டபடி அழுது கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

வீட்டில் கண்ணன் அழுது கொண்டு இருக்க ஐஸ்வர்யா கண்ணனை சமாதானப்படுத்துகிறார். நான் எல்லாமே தப்பு தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கேன். நம்ம அந்த வீட்டை விட்டு வந்திருக்கவே கூடாது. கோவத்துல வந்துட்டோம். ஆனா நம்மளால குடும்பம் நடத்த முடிஞ்சுதா? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி ஆகிறார்.

இப்படி எல்லாம் பேசாத கண்ணா ப்ளீஸ் என்று ஐஸ்வர்யா கெஞ்ச, எல்லாத்துக்கும் நான்தான் தப்பு அண்ணனை நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வெச்சிருக்கேன். அண்ணேன் என்னை அடிச்சதோடு விட்டு இருக்க கூடாது. என்னை கொன்னு போட்டு இருக்கணும் என்று அழுதபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் மூர்த்தி வீட்டில் அனைவரும் ஒன்றாக சாப்பிட உட்காருகின்றனர். அப்போது மூர்த்தியிடம் மீனா நீங்க வீட்ல எல்லாரும் இருக்கும்போது மொத்தமா சாப்பாடு வச்சு உருட்டி தருவீங்களா அப்படித்தாங்க என்று கேட்க, வாங்க இன்னைக்கு கொடுத்திடுவோம் என்று மூர்த்தி சொல்லி அனைவருக்கும் சாப்பாடு உருட்டி கொடுக்கிறார்.

சாப்பிட்டு முடித்ததும் ஜீவாவும் மீனாவும் வீட்டிற்கு போக முடிவெடுக்கின்றனர். மூர்த்தி வேண்டாம் என்று சொல்ல கயல் அங்க தனியா இருக்கு என்று சொல்ல, பிறகு எல்லோரிடமும் பேசிக்கொண்டு முல்லையை கிண்டல் செய்த படியே மீனாவும் ஜீவாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

Pandian Stores serial 2023 June 2th Episode full update

பிறகு கண்ணனும், ஐஸ்வர்யாவும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா கண்ணனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க ஒரு வழியா கடன் பிரச்சனை முடிஞ்சில, இனி யாரும் நம்ம வீட்டு வாசலில் வந்து நிற்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டு இருக்க அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வருகிறார்.

அந்த பிரச்சனை நடக்கும் போது வீட்டை விட்டு போனா, இப்பதான் வர என்று சித்தியிடம் ஐஸ்வர்யா கேட்க, ஆமா ஒரு வழியா அந்த கிரெடிட் கார்டு பஞ்சாயத்தை நீங்க முடிச்சிட்டீங்க, ஆனா கார்டில் வாங்குன பணத்தை மட்டும் தானே நீங்க முடிச்சு இருக்கீங்க இனி என்கிட்ட வாஙகுன பணத்தை எப்படி கொடுக்க போறீங்க என்று கேட்க, ஐஸ்வர்யாவும், கண்ணனும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+