மீண்டும் பண நெருக்கடியில் கண்ணன்..கடும் கோபத்தில் முல்லை..வெளியே போகும் கதிர்
சென்னை: ஐஸ்வர்யாவின் சித்தி தனக்கு தரவேண்டிய பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார்.
கண்ணன், ஐஸ்வர்யாவை மீண்டும் கதிர் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.
இதனால் முல்லை கோபப்பட்டு தனத்தை திட்டுகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 3ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி நீங்க கார்டில் வாங்கி இருக்கிற பணத்தை தானே கட்டி இருக்கீங்க. நான் வாங்கி தந்த பணத்தை எப்ப தருவீங்க? நான் அப்படி இப்படின்னு சொல்லி அவங்க கிட்ட ரெண்டு நாள் டைம் கேட்டு இருக்கேன். அதுக்குள்ள புரட்டி தந்திருங்க என்று மிரட்டுகிறார்.

இனி நாம என்ன பண்ண போறோம் ஐஸ் என்று கண்ணன் ஐஸ்வர்யாவிடம் புலம்பிக் கொண்டிருக்க, அப்போது கதிர் வீட்டுக்கு வருகிறார். வளைகாப்பு பண்ணனும் தான் ஆசைப்பட்டா ஆனா அதுதான் பண்ண முடியாமல் போயிடுச்சு என்று கதிர் ஐஸ்வர்யாவுக்கு ஆறுதலாக பேசுகிறார்.
அப்போ கண்ணன் நாங்க அஞ்சு லட்சம் எல்லாம் வாங்கல அண்ணேன் அப்போ எதுக்கு அண்ணே? அவங்க இவ்ளோ பணம் கேட்டாங்க என சோகத்தோடு கேட்க, அது அவங்கள அடிச்சதுக்கு எல்லாம் சேர்த்து கேட்டிருக்காங்க என்று கதிர் கூறி, நீ இவ்வளவு சம்பளம் வாங்குற அதுல பாதியாவது சேர்த்து வச்சிருக்கலாம். உனக்கு காசோட அருமை தெரியாம எப்படிடா போச்சு, நீயும் என்னை மாதிரி தானடா வளர்ந்தா என்று கண்ணனிடம் கேட்க ஐஸ்வர்யாவும் கண்ணனும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிகின்றனர்.
ஐஸ்வர்யா என் மேலயும் தப்பு இருக்கு மாமா என்று ஃபீல் பண்ணியபடியே சொல்ல, அடுத்து நீங்க என்ன பண்ண போறீங்கன்னு நினைச்சா தான் பயமா இருக்குன்னு கதிர் கூறி, நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா? என்று கண்ணனிடம் கேட்க நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று கண்ணனும் பதில் சொல்கிறார். அப்போ உடனே கிளம்பி வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கதிர் கூறுகிறார்.
நாங்க அங்க வந்தா மூர்த்தி மாமா திட்டுவாரு என்று ஐஸ்வர்யா சொல்ல, ஆமா இருக்குற கோவத்துக்கு பெரிய அண்ணே என்னை பாத்தா வெட்டி போட்டாலும் போட்டுவிடும் வேண்டாம் என்று கண்ணன் சொல்ல பெரியவங்க ஆயிரம் பேசுவாங்க நாம தான் பொறுத்துக்கணும் என்று கதிர் சொல்ல, தயங்கியப்படியே இருவரும் நிற்க, கதிர் போ போய் கிளம்பிட்டு வா என்று அனுப்பி வைக்க, இருவரும் பேக்கோடு வந்து நாங்க அங்க வருவது சரியா இருக்குமா? நான் அப்படி எல்லாம் பேசி இருக்க கூடாது என்று ஐஸ்வர்யா பீல் பண்ணுகிறார்.
பிறகு கதிர் ஐஸ்வர்யாவையும் கண்ணனையும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து வாசலில் நிற்க வைத்துவிட்டு, வீட்டுக்குள் வந்து தனத்தையும் முல்லையையும் வீட்டு வாசலுக்கு கூட்டிட்டு வர அவர்கள் கண்ணன் ஐஸ்வர்யாவை பேக் உடன் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இனி இவங்க நம்ம வீட்ல தான் இருக்க போறாங்க என்று கதிர் சொல்ல, முல்லை இவங்க தூரமா இருக்கும் போதே அவ்வளவு பிரச்சனை. வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டா என்ன ஆகும்னு கோபப்படுகிறார்.

கதிர் அனைவரையும் சமாதானப்படுத்த முல்லை நீங்க நல்லதுக்கு தான் பண்ணுவீங்க ஆனா மாமா என்ன சொல்லுவாரு நினைச்சு தான் பயமாயிருக்கு என்று கூற, தனம் அவர்கள் இருவரையும் வாங்க என்ன நடக்குது என்று பார்ப்போம் என்று வீட்டிற்குள் கூட்டி கொண்டு வருகிறார்.
பிறகு கதிர் கடைக்கு சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது வெளியூருக்கு போயிட்டு வரேன் என்று சொல்ல முல்லை எத்தனை நாள் ஆகும் என்று ஃபீல் பண்ணியபடி கேட்டுக் கொண்டிருக்க, முல்லையை சமாதானப்படுத்தி விட்டு கதிரும் வெளியே செல்கிறார். பிறகு முல்லை கோபமாக தனத்திடம் திட்டுகிறார். எதற்காக அவங்கள வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க என்று, அதற்கு தனம் உன் புருஷன் தானே கூட்டிட்டு வந்தான். நீ அங்க கேட்க வேண்டியதுதானே என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications