கோபத்தில் அவமானப்படுத்தும் முல்லை..கதறி அழும் ஐஸ்வர்யா..புது பிரச்சனையில் கண்ணன்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லைக்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டில் இருப்பது கொஞ்சம் கூட பிடிக்காமல் திட்டிக் கொண்டே இருக்கிறார்.
கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டில் இருப்பதை தெரிந்த மூர்த்தி இருவரையும் திட்டி வெளியே போக சொல்கிறார்.
அதற்கு தனம் இது கதிர் எடுத்த முடிவு முதல் முறை உங்ககிட்ட கேக்காம முடிவு எடுத்து இருக்கான் நீங்க எதுவும் சொல்லாதீங்க என்று சமாதானப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் ஆறாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். அப்போது தனம் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது முல்லை தனத்திடம் மாமா வந்தாச்சுல்ல நீங்க கண்ணன் ஐஸ்வர்யா வீட்டில் இருக்கிறத சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார்.
அதற்கு தனம் இப்ப தானே வந்திருக்காங்க உடனே சொன்னா நல்லா இருக்காது என்று சொல்லி சாப்பாடு எடுத்து வைக்க சொல்கிறார். பிறகு தனத்திடம் என்ன ஒரு சாப்பாடு தட்டு எடுத்து வைக்கிறீங்க உங்க கொழுந்தனுக்கு சாப்பாடு வைக்கலையா என்று முல்லை கிண்டல் செய்ய அதற்கு கண்ணன் சாப்பிட்டான் எவ்வளவு ஆசையா சாப்பிட்டான் தெரியுமா என்று தனம் கேட்க அவன் என்ன அங்க பட்டினியாகவா இருந்தான் என்று முல்லை திட்டுகிறார்.
பிறகு மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஜாடை மாடையாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பற்றி தனம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் பேச்சை எடுத்ததும் மூர்த்தி கோபம் ஆகி சாப்பிடாமலே எழுந்து போய் விடுகிறார். பிறகு முல்லையும் தனமும் கதிர் ஐஸ்வர்யாவிடம் வந்து பேச மாமா உங்க பேரை எடுத்தாலே ரொம்ப கோபமா திட்டுறாரு அதான் நீ சீரியல் பார்க்கிறேன்னு சொன்னாலா இன்னும் இரண்டு மூன்று சீரியல் இருக்கு போய் பாரு என்று முல்லை குத்தலாக பேசுகிறார்.
அதற்கு ஐஸ்வர்யா நாங்க இங்க இருக்கிறது மாமாவுக்கு பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பா முல்லை அக்காக்கு பிடிக்கல எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க என்று தனத்திடம் கம்ப்ளைன்ட் செய்கிறார். பிறகு மூர்த்தி தனத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது நீ எதையோ மறைகிற சொல்ல வந்தை முழுசா சொல்லாம முழிச்சுகிட்டு நிக்கிற, என்னன்னு கேட்க தனம் இருங்க என்று கூறி கண்ணனை கூட்டிக்கொண்டு மூர்த்தி முன்னாடி விடுகிறார்.

கண்ணனைப் பார்த்த மூர்த்தி கடும் கோபத்தில் இவன் என்ன இங்க பண்ணுறான். இவனால இன்னும் எத்தனை பேர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணுமோ என்று கடும் கோபத்தில் திட்டி விரட்ட கண்ணன் அங்கு இருந்து சென்று ஐஸ்வர்யாவிடம் அழுது கொண்டு இருக்க ஐஸ்வர்யாவும் நாம நம்ம வீட்டுக்கே போயிடலாமா என்று அழுது கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இவங்க இனி இங்க தான் இருக்க போறாங்க கதிர் தான் இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க என்று முல்லை சொல்ல மூர்த்தி மேலும் கோபமாக, தனம் மூர்த்தியை சமாதானம் செய்கிறார். முதல் தடவையா கதிர் உங்ககிட்ட கேட்காம முடிவெடுத்து இருக்கிறான். தம்பிக்காக அவன் தான் எல்லா கஷ்டத்தையும் தாங்கி இருக்கான். இது அவன் எடுத்த முடிவு என்று சொல்ல மூர்த்தி யோசித்தபடி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications