மீண்டும் வீடியோ எடுத்து ஆட்டம் போடும் ஐஸ்வர்யா..கடும் கோபத்தில் மூர்த்தி.. அவமானப்படுத்தும் மீனா
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி கண்ணன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்ட தனம் மூர்த்தியை சமாதானப்படுத்துகிறார்.
தனத்தின் திறமையை பார்த்து முல்லை வியந்து போய் பாராட்டுகிறார்
ஐஸ்வர்யா கதிர் வீட்டுக்கு வந்தும் திருந்தாமல் மீண்டும் வீடியோ எடுத்து கொண்டிருப்பதை பார்த்து மூர்த்தி கோபம் ஆகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 7-ம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மூர்த்தி கண்ணன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டியதற்கு தனம் இதற்கு காரணமே கதிர்தான். கதிர் தான் தன்னுடைய தம்பியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்.
அவன் உங்க கிட்ட கேட்காமல் அவன் தம்பிக்காக எடுத்த முடிவை நீங்க வேண்டான்னு சொன்னா அவன் ரொம்ப வருத்தப்படுவான் என்று கண்ணனுக்காக மூர்த்தியிடம் தனம் சண்டையிட்ட பிறகு வேறு வழி இல்லாமல் மூர்த்தி என்னவோ செய்யுங்க என்று கோபத்தோடு அந்த இடத்தை விட்டு கிளம்பி போய்விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியான முல்லை தனத்தை ஓடி வந்து கட்டிப்பிடித்து எப்படிக்கா உங்களால் மட்டும் இப்படி எல்லாம் முடிஞ்சு. வார்த்தைக்கு வார்த்தை எங்க வீட்டுக்காரர் பேரை சொல்லியே நீங்க மாமா மனசை மாத்திட்டீங்க? அவரை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு தெரிஞ்சு இப்ப கண்ணனை வீட்ல இருக்க வச்சிட்டீங்களே என்று கேட்க தனம் எனக்கு மூர்த்தி மாமாவ பத்தி தெரியும்.
அதனால அவர் மனச மாத்துற மாதிரி பேசிட்டேன் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்க, கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்து கண் கலங்க தனத்திற்கும் முல்லைக்கும் நன்றி கூறுகின்றனர். பிறகு முல்லை அதான் நீங்க இங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சே, இனி சந்தோஷமா இருங்க என்று குத்தலாக பேசுகிறார்.
அடுத்த நாள் காலையில் வீட்டில் வாங்கி இருந்த பேப்பரை எடுத்து படித்தபடியே கண்ணன் தனத்தை நக்கல் செய்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் வரும் மூர்த்தி கண்ணனை பார்த்து கோபமாகி பேப்பரை பிடுங்கி கொண்டு செல்கிறார். அப்போது தனம் நீங்க இங்க இருக்கிறது எல்லாம் சரிதான் நீங்க வீடியோ போடறது மாமாவுக்கு கொஞ்சம் புடிக்கல. அதனால அதை செய்யாதீங்க என்று சொல்லி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா பாத்ரூம் அருகே நின்று வீடியோவில் பாத்ரூம் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக பாத்ரூம் செல்ல வரும் மூர்த்தியை வழிமறித்து இதுதான் எங்க மூர்த்தி , இவரு பெரிய சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கார் என்று வீடியோவில் காட்டியபடி பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்து மூர்த்தி கடுப்பாகி கோபமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications