ஐஸ்வர்யாவால் கண்ணனை திட்டும் தனம்..கோபத்தில் மூர்த்தி எடுத்த முடிவு.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: கதிரிடம் கண்ணன் பணம் வாங்கிய விஷயத்தை முல்லை தனதிடம் போட்டுக் கொடுக்கிறார்.
கதிரிடம் எதற்காக பணம் வாங்கினீங்க என்று தனம் கண்ணனை திட்டுகிறார்.
கண்ணன் கதிரிடம் பணம் வாங்கிய விஷயம் மூர்த்திக்கு தெரிந்து மூர்த்தியும் திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மே 13 தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் செய்வதை பார்த்து எனக்கு எரிச்சலாக இருக்கு என்று முல்லை தனத்திடம் கோபப்படுகிறார்.
அதற்கு சரி விடு அவங்க அப்படித்தான் என்று என தனம் சிரித்தபடியே பேச இல்ல அக்கா உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல தனம் என்னவென்று கேட்க இல்ல வேண்டாம் என்று முல்லை மறைக்க பார்க்க பிறகு நானும் சொல்லக்கூடாது என்று தான் நினைக்கிறேன் ஆனா மனசு கேக்க மாட்டேங்குது அன்னைக்கு ஐசு ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது ஹாஸ்பிடல் பில்லு கட்ட கூட கண்ணன் பணம் இல்லாமல் தவித்து இருக்கிறான்.
பிறகு கதிர் தான் கடைக்கு வச்சிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து பில் கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க, இப்ப மறுபடியும் வீட்டு செலவுக்குனு வந்து பணம் வாங்கிட்டு போயிருக்காங்க, அப்போ அவங்களுக்கு வர்ற சம்பளத்தை தான் என்னதான் பண்றாங்கன்னு தெரியல என்று கோபத்தோடு போட்டுக் கொடுக்கிறார். தனம் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் வீட்டுக்கே சென்ற தனம் எதுக்காக நீ கதிர் கிட்ட பணம் கேட்ட என்று கேட்க கண்ணன் தலை குனிய ஐஸ்வர்யா கோபமாகிறார். வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கினதனால கையில் இருக்கிற பணம் எல்லாம் காலி ஆயிட்டு. அதனாலதான் ஹாஸ்பிடல் பணம் கட்ட முடியல. அண்ணன் கிட்ட வாங்கினேன் ஆனா கண்டிப்பா திருப்பி கொடுத்துவிடுவேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த தனம் முல்லையிடம் பணத்தை கொடுத்து இது கதிர் கண்ணனுக்கு கொடுத்த பணம் இருக்கட்டும் நீங்களும் செலவுக்கு வச்சுக்கோங்க என்று கொடுக்க அந்த நேரம் சரியாக மூர்த்தி வீட்டிற்குள் வந்துவிடுகிறார். பிறகு நான் வரும்போது என்ன பணம் பற்றி நீங்கள் பேசிக்கொண்டு இருந்தீர்களே என்ன என்று கேட்க தனம் ஒன்னும் இல்லை என்று சமாளிக்கிறார்.

பிறகு நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். நீ உண்மைய சொல்லு தனம் என்று மூர்த்தி கேக்க முல்லை ஐஸ்வர்யா ஹாஸ்பிடல் இருக்கும்போது பணம் இல்லாமல் தவித்ததையும் கதிர் தான் பில் கட்டுவதற்கு பணம் கொடுத்ததையும் பற்றி சொல்ல, மூர்த்தி கோபத்தில் திட்டுகிறார். வீட்டைவிட்டு போகும்போது எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற திமிரில் தானே போனாங்க? பிறகு அவங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது எதுக்காக கதிர் கிட்ட வந்து நிற்கனும் என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications