காலை பிடித்து கடன் கேட்கும் ஐஸ்வர்யா.. அதிர்ச்சியில் கண்ணன்..தனத்துக்கு செக் வைத்த முல்லை
சென்னை: தனத்தை வீட்டை விட்டு கிளம்ப சொன்னது முல்லையின் அம்மாதான் என்ற உண்மையை கதிரும் முல்லையும் கண்டுபிடித்து விடுகின்றனர்.
முல்லையின் அம்மாவை வீட்டை விட்டு கதிர் வெளியேற்றுகிறார்.
ஐஸ்வர்யா தன்னுடைய சித்தியிடம் கடன் கேட்டு கெஞ்சுவதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மே 17ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் தனமும் மூர்த்தியும் வீட்டை விட்டு கிளம்புவதால் கதிரும் முல்லையும் எதற்காக வீட்டை விட்டு போறீங்க என கேட்கின்றனர். அப்போது உண்மையை சொல்லாமல் தனம் சமாளிக்கிறார்.
அதனால் முல்லை பாண்டியனை வாங்கி வைத்துவிட்டு தனத்தின் கையை தன் தலையில் வைத்து கண்டிப்பாக நீங்க இந்த வீட்டை விட்டு போக கூடாது என்று சத்தியம் செய்கிறார். பிறகு முல்லை தனது அம்மாவிடம் நீ ஏதாவது அக்காவை பார்த்து சொன்னியா என்று கேட்க அவர் மறுத்து விடுகிறார்.

பிறகு கதிரும் முல்லை அம்மாவிடம் அதே கேள்வியை கேட்க அதற்கு நான்தான் சொன்னேன் இரண்டு புள்ள தாச்சி பொண்ணுங்க ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக போக சொன்னேன் என்று சொல்கிறார். இதை தொடர்ந்து அதிர்ச்சியான கதிர் அவங்க இங்கதான் இருப்பாங்க எங்கேயும் போக மாட்டாங்க என்று சொல்லி திட்ட முல்லையும் திட்டுகிறார்.
நீ வீட்டை விட்டு போ என்று சொல்ல முல்லையின் அம்மா பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அப்போது தனம் ஏன் சித்தி கிளம்புறீங்க என்று கேட்டதற்கு தனத்தை திட்டுகிறார். இப்போ உனக்கு சந்தோஷமா? நீயும் உன் புருஷனும் நாடகம் போட்டு ஏமாத்திட்டீங்களா? என்று திட்ட கதிர் வந்து கிளம்பினால் போக வேண்டியது தானே எதுக்காக அவங்கள வந்து தேவை இல்லாம திட்றீங்க என்று கேட்க முல்லை அம்மா கோவத்தோடு கிளம்பி விடுகிறார்.

அதைத் தொடர்ந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டில் இருக்கின்றனர். அப்போது அவங்க வீட்டுக்கு ஐஸ்வர்யாவின் சித்தி அதிரசம் கொடுக்கிறார். அப்போது ஐஸ்வர்யா தன்னுடைய சித்தியிடம் ஐஸ் வைத்து பேசிவிட்டு கை அமுக்கி காலை அமுக்கி பிறகு கடனாக பணம் கேட்கிறார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, யாரிடமாவது கடன் வாங்கித்தா என்று ஐஸ்வர்யா சொல்ல, கடன் வாங்கி தந்தா நீங்க எப்படி கட்டுவீங்க என்று ஐஸ்வர்யா சித்தி கேட்க கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications