Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன்காரர்களிடம் அடிபடும் கண்ணன்..மூர்த்தி எடுத்த முடிவு..ஃபீல் பண்ணும் ஜீவா..அதிரடியான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா தான் வட்டிக்கு பணம் வாங்கினது முல்லைக்கு தெரியக்கூடாது என்று மறைத்து வைக்கிறார்.

கண்ணனும் ஜீவாவும் கதிர் கடையில் சந்தித்துக் கொண்டு பழைய நினைவுகளை பேசி ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யா வளைகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தனம் சொல்ல மூர்த்தி திட்டி விடுகிறார்.

Pandian Stores serial 2023 May 23th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 23ஆம் தேதி எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி வட்டிக்கு வாங்கிய பணத்தை கொண்டு வந்து கொடுக்க, அதில் பணம் கம்மியாக இருக்கிறதே என்று ஐஸ்வர்யா கேட்க வட்டி எடுத்துக் கொண்டுதான் தந்திருக்காங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு எனக்கு ஜூஸ் தர மாட்டியா என்று கேட்க கண்ணனை ஜூஸ் போட சொல்லி ஐஸ்வர்யா கூறிக் கொண்டிருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு வரும் முல்லைக்கு நான் ஜூஸ் போடுகிறேன் என்று ஐஸ்வர்யா கூடவே ஐஸ்வர்யா சித்தியை கூட்டிக்கொண்டு தனி அறைக்கு சென்ற உள்ள இடம் கடன் வாங்கின விஷயத்தை பற்றி சொல்லாதீங்க என்று கெஞ்சி கேட்கிறார். எனக்கு ஆதாரம் வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தி சொல்ல அதற்கு நான் வீடியோ வேணா எடுத்து தருகிறேன் என்று கெஞ்சுகிறார்.

அடுத்ததாக முல்லையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது முல்லை பணத்துக்கு என்ன பண்றீங்க என்று கேட்க, அப்போ நீங்க எங்களை வேவு பாக்குறதுக்காக தான் வந்தீங்களா? என்று ஐஸ்வர்யா அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவின் சித்தி நான் தான் இருக்கேன் இல்ல, நான்தான் எப்படி பார்த்து பார்த்து செலவு பண்ணனும் என்று சொல்லிக் கொடுக்கேன் என்று கூறுகிறார்.

Pandian Stores serial 2023 May 23th promo and Episode Highlights

அடுத்ததாக கதிர் கடைக்கு கதிரை தேடி கண்ணன் வர அதே இடத்திற்கு அதைத்தொடர்ந்து ஜீவாவும் வர இருவரும் டீ குடித்தபடியே பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் எவ்வளவு சந்தோஷமாக நம்ம வீட்டில் இருந்தோம் என்பதை பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இனி நாம் அப்படியெல்லாம் இருப்போமா என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். பிறகு கதிர் வருவதற்கு லேட் ஆகும் என்று தெரிந்ததால் இருவரும் கிளம்பி போகின்றனர்.

அதைத்தொடர்ந்து தனம் வீட்டில் ஐஸ்வர்யாவின் வளைகாப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் அவங்க பணதிற்கு என்ன பண்ணுனாங்கன்னு தெரியலையே என்று பேசிக்கொண்டு இருக்க, முல்லை அது அவங்க பாத்துக்குவாங்க நீங்க இப்படி புலம்பிகிட்டு இருக்கீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, அங்கே மூர்த்தி வருகிறார். மூர்த்திடமும் நாம ஏதாவது நகை எடுக்கணும் என்று சொல்ல அது எல்லாம் எதற்கு தேவையில்லாத வேலை என்று கூறி திட்டிவிட்டு கிளம்பி விடுகிறார்.

இந்த நிலையில் அடுத்ததாக ஜீவா மீனாவிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய நண்பன் ஒருவருக்கு தான் கடை வாங்க ஹெல்ப் பண்ணுனதால் எனக்காக ஒரு ஷேர் தருகிறேன் என்று கூறுகிறான். அவன் கொஞ்சம் பணம் அனுப்புறேன் என்று என்னுடைய அக்கௌன்ட் நம்பர் கேட்கிறான் என்று சொல்ல பிறகு அந்த பணத்திலே நாம் ஏதாவது ஐஸ்வர்யாவிற்கு நகை வாங்கி கொடுத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது

Pandian Stores serial 2023 May 23th promo and Episode Highlights

நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணன் வீட்டிற்கு பேங்க் ஆஃபீஸர்ஸ் மீண்டும் வருகின்றனர்.நாங்கள் உங்களுக்கு தந்த டைம் முடிந்து விட்டது. இனி என்ன பண்ணலாம்? இனி இவன் பொண்டாட்டிய தூக்கலாம் என்று ஐஸ்வர்யாவை தொட போக கண்ணன் தடுக்க கண்ணனை போட்டு வீட்டிற்குள்ளே அடிக்கின்றனர். ஐஸ்வர்யா தடுக்க போக ஐஸ்வர்யாவின் சித்தி பிடித்துக் கொள்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+