ஜெயிலுக்குள் கதிர் செய்த செயல்.. கண்ணனுக்கு விழுந்த அடி..மீனா கேட்ட கேள்வி..பரபரப்பான திருப்பம்
சென்னை: வீட்டிற்கு வந்த போலீஸ் கதிரை அரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைக்கின்றனர்.
மூர்த்திக்கு தெரிய வந்த உண்மைகளால் கோபத்தில் கண்ணனை போய் அடிக்கிறார்.
மொத்த குடும்பமும் அழுது கொண்டு இருக்க மீனா அதிர்ச்சியில் இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 26ஆம் தேதிக்கான எபிசோடில் அனைவரும் வளைகாப்பு பங்ஷனுக்கு போவதற்காக கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது மேட்சிங் சட்டை போடவில்லையா என்று கதிர் கேட்க, சட்டை மட்டும் ஒரே மாதிரி போட கூடாது. மனசும் ஒற்றுமையாய் இருக்கணும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அப்படியே எல்லோரும் பேசிய படி கிளம்பி கொண்டிருக்கும்போது வீட்டிற்குள் போலீஸ் வந்து இங்கே யார் கதிர் என்று கேட்டபடியே வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அப்போது கதிர் நான்தான் என்று போலீஸிடம் சொல்ல, வாங்கிய கடனை கொடுக்க முடியலன்னா கடன் கொடுத்தவன் கூட ரெண்டு வார்த்தை பேச தான் செய்வோம் .அதுக்கு நீ உயிர் போகுற மாதிரி அடிப்பியா? என்று கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.
எல்லோரும் நீ கடன் வாங்கினியா? கடன் கொடுக்காம அடிச்சியா? என்று கேட்க அங்க நடந்தது வேறு நான் கடன் வாங்கல்ல கண்ணன் ஏதோ கடன் வாங்கி இருப்பான் போல அது கட்ட முடியாமல் அந்த ஆபீஸர்ஸ் ஐஸ்வர்யாவை அசிங்கமா பேசி இருக்காங்க. அதனால தான் என்று சொல்ல, போலீஸ்காரர்கள் எதுவா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனில் போய் பேசலாம் வா என்று வண்டியில் அழைத்து செல்கின்றனர்.
முல்லை இதைக் கேட்டு கதறி அழுது அவருக்கு ஒன்னும் தெரியாது அவரை விட்டுடுங்க என்று கதறியபடி ரோட்டில் நின்று அழுது கொண்டிருக்கிறார். மூர்த்தி தனம் அண்ணனோடு சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலீஸ்காரர்களிடம் கெஞ்ச அதற்கு அவங்க எதுவாக இருந்தாலும் அந்த பேங்க் ஆபிஸர்ஸ் கிட்ட பேசி கேசை வாபஸ் வாங்குற வேலைய பாருங்க. கொலை முயற்சி கேஸ் போட்டு இருக்கு என்று சொல்ல மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு முல்லை அப்பாவும் வர அவரும் கதிரிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க, போலீஸ்காரர்கள் எல்லாரும் வந்து பிரச்சனை செய்து கொண்டு இருக்காதிங்க, அடுத்து என்ன நடக்கணுமோ அதை போய் பாருங்க என்று திட்டி அனுப்புகிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா வளைகாப்புக்கு கிளம்பி கொண்டு இருக்க கண்ணனிடம் உன் முகத்தில் அடிபட்டிருக்கிறதை பற்றி வீட்ல உள்ளவங்க எல்லாரும் கேட்டா என்ன சொல்றது என்று பேசிக்கொண்டு இருக்க அங்கு இருக்கும் ஐஸ்வர்யாவின் சித்தி அப்போ உங்களுக்கு அடி வாங்குனது கூட கஷ்டமா இல்ல ஆனா அதை சொல்றதுதான் கஷ்டமா இருக்கு. அடி வாங்குனது கூட பெருசு இல்ல ஆனா கடன் வாங்குனது தெரிஞ்சுன்னா இன்னைக்கு மொத்த குடும்பமும் பெரும் பிரச்சனை செய்வாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு மீனாவும் வந்துவிட மீனா கண்ணனிடம் முகத்தில் என்னடா இது அடிபட்டு இருக்கு என்று கேட்டுக் கொண்டிருக்க, அதே நேரத்தில் மூர்த்தி வீட்டிற்கு கண்ணா என்று கூப்பிட்டபடி வருகிறார். கண்ணன் வாங்க அண்ணே என்று அவரை வரவேற்க மூர்த்தி கண்ணன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார்.
உன்னால நாங்க யாரும் நிம்மதியாக இருந்திட கூடாதுன்னு நீ வேலை பண்ணிக்கிட்டு இருக்கியா? உனக்கு நல்லபடியா வாழ தெரியலன்னா அதுக்கு எல்லாரையும் சாகடித்து விடுவியா? உனக்கு சப்போர்ட் செய்ய வந்து கதிர் இப்போ ஜெயில்ல இருக்கான். அவன் மேல கொலை முயற்சி கேஸ் போட்டு இருக்காங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மீனா இங்கே என்ன நடக்கிறது என தெரியாமல் என்னாச்சுன்னு கேட்ட மூர்த்தி இவனுக்கு குடும்ப நடத்த தெரியாமல் லட்சக்கணக்குல கடன் வாங்கி வச்சிருக்கான். அதை கட்ட முடியாததுனால கடங்காரன் கிட்ட அடி வாங்கி இருக்கான். நம்ம குடும்பத்துல யாராவது இப்படி கடங்காரங்க கிட்ட அடி வாங்கி இருக்காங்களா? எனக்கு என்ன பண்ணுவான்னு தெரியாது இப்ப கதிர் வெளியே வந்து ஆகணும் என்று திட்டி விட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications