கண்ணனுக்கு பணம் கொடுத்து உதவும் கதிர்..முல்லை கேட்ட கேள்வி.. ஐஸ்வர்யா செய்யும் புது பிரச்சனை
சென்னை: மருத்துவமனையில் பில் கட்டுவதற்கு பணம் இல்லாமல் தவிக்கும் கண்ணனுக்கு கதிர் பணம் கொடுத்து உதவுகிறார்.
கண்ணனுக்கு பணம் கொடுத்ததற்காக முல்லை கதிரை திட்டுகிறார்.
வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா சாப்பாடு விஷயத்தில் கண்ணனுக்கு புது சிக்கல் இழுத்து விடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன் மே ஐந்தாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கண்ணன் மருத்துவமனையில் பில் கட்டுவதற்கு பணம் இல்லாமல் வீட்டில் யோசித்தபடி இருக்க, கண்ணன் எப்போது வருவான் என்று கதிர் கேட்க, அங்க பணம் இருந்தா தானே எடுத்துட்டு வருவான் என்று ஐஸ்வர்யாவின் சித்தி கூறுகிறார். அதற்கு ஐஸ்வர்யா இல்ல கண்ணன் எப்படியும் பணம் எடுத்துட்டு வந்து கட்டி விடுவான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

பிறகு கண்ணன் ஏற்கனவே நடந்து கொண்ட விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்த்த கதிர் பிறகு ஹோட்டலுக்கு சென்று அங்கே வேலைகளை செய்தபடி ஹோட்டலில் இருந்து பணத்தை எடுத்து வந்து பில் கட்டுகிறார். பிறகு மருத்துவமனையில் பணம் இல்லாமல் பில்லையே பார்த்தபடி இருக்கும் கண்ணனிடம் என்ன ஆச்சு என கேட்க, இல்லை இப்போ கிளம்பிருக்கலாம் பில்லு கட்டிட்டு போவோம் என்று சொல்ல, நான் கட்டியாச்சு வா போலாம் என்று கதிர் கூப்பிடுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் டீ வாங்க சொல்லி ஐஸ்வர்யா சொல்ல டீ வாங்குவதற்கு வீட்டில் இருக்கும் சில்லறையை எடுத்து கண்ணன் எண்ணிக் கொண்டு இருக்க அதை பார்த்து கதிர் அதிர்ச்சியடைகிறார். பிறகு கண்ணன் வாங்கிக் கொண்டு வந்த டீயை குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும்போது ஐஸ்வர்யா தடுத்து நிறுத்தி யூட்யூபில் வீடியோ போட வீடியோ எடுக்கிறார். அதை பார்த்து கடுப்பான கதிர் இந்த வீடியோவை தயவுசெய்து அப்லோட் பண்ணிடாதீங்க. இதை டெலிட் பண்ணிருங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
வெளியே போகும்போது கண்ணனுக்கு வீட்டிற்கு செலவுக்கு பணம் இருக்கிறதா என்று கேட்க அதற்கு கண்ணன் பார்த்துக்கலாம் என்று சொல்ல, கதிர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு கிளம்புகிறார். அடுத்து ஐஸ்வர்யாவிற்கு சாப்பாடு கடையில் போய் வாங்கிட்டு வா என்று ஐஸ்வர்யாவின் சித்தி சொல்ல உடம்பு சரியில்லாமல் இருக்கிற ஐஸ்வர்யாவுக்கு எப்படி கடையிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு கொடுப்பது என்று கண்ணன் சொல்ல சரி வீட்டுக்கு சமையல் பொருட்கள் வாங்கிட்டு வா நானே சமைச்சு தருகிறேன் என்று சொல்கிறார்.

அதே நேரத்தில் கதிர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, முல்லையிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். செலவுக்கு பணம் இல்லாமல் கண்ணன் கஷ்டப்படுவதை சொன்னதை கேட்டு முல்லை திட்டுகிறார். கையில் பணம் இருக்கிற திமிரில் தானே தனியா போனாங்க, இப்போ இந்த நிலைமை தேவைதான் என்று முல்லை திட்டிக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா எனக்கு நான் வெஜ் தான் வேண்டும் என்று சொல்ல கண்ணன் கறிக்கடைக்கு போகிறார். அங்கே ஒரு கிலோ கறி ஆயிரம் ரூபாய் என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். கடைக்காரர் இதற்கு முன்பு கறி சாப்பிட்டது கிடையாதா என்று அவமானப்படுத்த கண்ணன் யோசித்தபடி இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications