ஜீ தமிழ் சீரியலில் கமிட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. ஆரம்பத்திலேயே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் பிரபலமடைந்த நடிகை லாவண்யா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் முக்கிய கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல புதியதான கதைகளத்தோடு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் இளைஞர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் மற்றும் சிற்பிக்குள் முத்து சீரியல் மூலம் பிரபலமடைந்த லாவண்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இது குறித்து ரசிகர்கள் அவரிடம் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் கதிர் -முல்லை ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே சித்ரா திடீரென்று மரணம் அடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா நடித்து வந்தார் அவரும் சீரியலில் இருந்து திடீரென்று விலகியதை தொடர்ந்து அவர் கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வந்தார். லாவண்யா ஏற்கனவே சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதுபோல நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் லாவண்யா அடிக்கடி லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பார். அப்போதுகூட தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் பேங்கில் வேலை பார்த்த நிலையில் தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அதிலிருந்து விலகி நடிக்க தொடங்கி இருந்தேன். ஆனால் ஆரம்பத்தில் குடும்பத்தில் அதற்கு சம்மதிக்கவில்லை.
பிறகு ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்து இப்போது என்னுடைய கனவை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் அவரிடம் இந்த மாதிரி ஸ்பெஷல் என்ட்ரி எல்லாம் வேண்டாம், சீக்கிரமாக மெயின் கேரக்டரில் கமிட் ஆகுங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications