திடீரென வலியில் துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் திணறும் கண்ணன்..பரபரப்பான தருணம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீரென்று ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ஏற்கனவே அழுது கொண்டே இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.
இந்த வேளையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த முல்லையின் வளைகாப்பு பங்க்ஷன் இனிதே முடிவடைந்தது. இதில் யார் பிரச்சனை செய்வார்கள்? என்றும் ஏற்கனவே வெளியான ப்ரோமோ கனவா நினைவா? நிஜத்தில் ஜீவா வளைகாப்புக்கு வருவாரா? என்று பல கேள்விகள் இருந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் விடை கிடைத்து நல்லபடியாக அனைவரும் முல்லை வளைகாப்பில் கலந்து கொண்டு இருந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யாவை மல்லியும் ஐஸ்வர்யாவின் சித்தியும் கடைசியில் அவமானப்படுத்தி அனுப்பி இருக்கின்றனர். ஓடிப்போய் கல்யாணம் பண்ணின மாதிரி ஓடி போய் வளைகாப்பு பண்ணி, குழந்தை பெத்துக்க முடியுமா? உனக்கு யாரு குழந்தை பேருகாலம் பார்ப்பார்கள் என்று மல்லி கேட்ட கேள்வியால் கோபத்தில் அதையே நினைத்து நினைத்து ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டில் ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டு விடவே அவரை கண்ணன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். பின்பு அங்கு தன்னுடைய கார்ட் உபயோகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஏற்கனவே தன்னுடைய கிரெடிட் கார்டு லிமிட் வரைக்கும் கடன் வாங்கி வைத்திருக்கும் ஐஸ்வர்யாவால் மருத்துவமனையில் பணம் கட்ட முடியாமல் கண்ணன் தவிக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் தனக்கு உதவியாக கண்ணன் கதிருக்கு போன் போடுகிறார். ஜீவா கண்ணனுக்கு உதவுவதற்காக கதிர் மொத்த குடும்பத்தோடு மருத்துவமனைக்கு ஓடி செல்கிறார். இதனால் இனி கண்ணனும் ஐஸ்வர்யாவும் மனம் மாறி குடும்பத்தோடு சேர இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் மூர்த்தி தனியாக பொருள்களை டெலிவரி செய்து கொண்டிருப்பதை பார்த்த ஜீவா பீஃல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் இனி மூர்த்திக்கு உதவியாக ஜீவாவும் மனம் மாறி பெட்டிகளை இறக்கி வைத்து உதவி பண்ணுகிறார். அதுபோல இனி ஜீவாவும் தன்னுடைய அண்ணனின் கஷ்டத்தை பார்த்து உதவியிருக்கும் நிலையில் இனி எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications