Pandian Stores: மயில் அம்மா சொன்ன பொய், ஸ்டேஷனில் பாண்டியன் செய்த செயல்! கோபத்தில் சரவணன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2025 டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் மயிலின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மயிலின் அம்மா பாண்டியன் குடும்பத்தினர் தன்னுடைய மகளுக்கு வரதட்சனை கொடுமை செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார். இதனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் குடும்பத்தின் இருந்து மயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் போனதால் தன்னுடைய மகள் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மயில் அம்மாவும் அப்பாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பாண்டியன் குடும்பத்தினர் தங்களுடைய மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோமதி வீட்டில் சோகமாக இருக்க, அப்போது ராஜி நான் சமைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு முன்பு போலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. காந்திமதி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது போலீஸ்காரர்கள் உள்ளே சென்று கோமதி உள்ளிட்ட எல்லோரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகின்றனர்.
அதோடு குழலி எங்கே என்று கேட்க, அவர் புருஷன் கூட வெளியூருக்கு போயிருக்காங்க என்று சொல்கின்றனர். ஆனாலும் போலீஸ் நீங்க எல்லாரும் கண்டிப்பாக ஸ்டேஷனுக்கு வரணும் என்று சொல்லி அவர்களை ஜீப்பில் ஏத்துகின்றனர். மயில் குடும்பத்திலிருந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க என்று சொன்னதும், கோமதி என் புருஷன் கிட்ட பேசணும் என்று பாண்டியனுக்கு போன் போட அவரும் ஸ்டேஷனுக்கு தான் வருவாரு வாங்க அங்க வாங்க என்று எல்லோரையும் வலுக்கட்டாயமாக கூட்டிக்கொண்டு போகின்றனர்.
அதை பார்த்து காந்திமதி என்னவென்று விசாரிக்கிறார். மயில் அம்மா எங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க. அதுக்காக எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறாங்க என்று சொல்ல, அதற்கு காந்திமதி போலீஸிடம் இவங்க மேல எந்த தப்பும் இல்லை என்று சொல்கிறார். எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க என்று சொல்லி போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு போய்விடுகின்றனர்.
மறுபக்கத்தில் பாண்டியன் கடையில் இருக்கும் போது அங்கு போலீசார் வருகின்றனர். உங்க மேல புகார் கொடுத்து இருக்கிறார்கள் என்று கதிர், சரவணன் உள்ளிட்ட எல்லோரையும் கூப்பிடுகின்றனர். அப்போது சரவணன் நான் தான் மயிலின் புருஷன், எதுவாயிருந்தாலும் என்னை கூட்டிட்டு போங்க. இவங்க எல்லாரும் எதுக்கு வரணும் என்று கேட்க, அதையெல்லாம் ஸ்டேஷனில் வந்து பேசிக்கோங்க என்று கூட்டிக்கொண்டு போகின்றனர்.
அங்கு ஏற்கனவே கோமதி, அரசி, ராஜி மூன்று பேரும் அழுது கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து சரவணன் உட்பட எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். எதுக்காக இவங்களையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க என்று பாண்டியன் கோவப்பட்டு திட்டுகிறார். அப்போது செந்திலையும் போலீஸ் கூட்டிக்கொண்டு வருகின்றனர்.
எதுக்காக எங்களை இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க, போலிஸ் பாக்கியாவிடம் நீங்க இவங்க மேல என்ன கம்பளைண்ட் கொடுத்திருக்கீங்க சொல்லுங்க என்று சொன்னதும் பாக்கியம் என் பொண்ணை அடிச்சு கொடுமைப்படுத்தி இருக்காங்க. என் பொண்ணுக்கு நாங்க 80 சவரன் நகை போட்டு கல்யாணம் பண்ணி கொடுத்தோம். ஆனா அது போதாதுன்னு இவங்க நகை கேட்டு தொந்தரவு பண்ணி இருக்காங்க.
புது வீட்டுக்கு போனதும் விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த சீரியல் நடிகை ஸ்ரேயா- சித்து தம்பதி! குவியும் வாழ்த்து
அதனால குழந்தை கலைஞ்சிடுச்சு. அதையும் என் பொண்ணு மேல தான் தப்புனு சொல்லுறாங்க என்று சொல்லிக் கொண்டே போக, சரவணன் பாக்கியத்தை அடிக்கப் போகிறார். அப்போது பாக்கியம் பாத்தீங்களா மேடம் உங்க முன்னாடியே அடிக்க வராங்க என்று நாடகம் போடுகிறார். அதற்கு பாண்டியன் சொல்லி முடிக்கட்டும் என்று அமைதியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications