புது வீட்டுக்கு போனதும் விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த சீரியல் நடிகை ஸ்ரேயா- சித்து தம்பதி! குவியும் வாழ்த்து
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலமாக ஜோடியாக நடித்து வாழ்க்கையிலும் இணைந்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து தம்பதிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் சமீபத்தில் தான் புது வீடு கட்டி குடி பெயர்ந்து இருந்தனர். அதற்குப் பிறகு அந்த வீட்டில் வைத்து ஒரு கொண்டாட்டம் நடந்திருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை இந்த தம்பதி வெளியிட்டு இருக்கின்றனர்.
சீரியலில் ஒன்றாக நடிக்கும் ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரேயா, சித்து தம்பதி ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் தான். இவர்கள் அறிமுகமான ஒரே சீரியலில் இவர்களுக்கு நல்ல பிரபலம் கிடைத்தது. இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக வேண்டும் என்று பலர் கமெண்ட் கொடுத்தனர். அதையே இவர்களும் சீரியஸாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையிலும் இணைந்து விட்டனர்.

திருமணம் சீரியல் முடிவடைந்ததும் ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சித்துவுக்கு விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராஜா ராணி 2 சீரியல் ஹிந்தி சீரியலை டப்பிங் செய்து ஒளிபரப்பான "என் கணவன் என் தோழன்" சீரியலின் டப்பிங் தான். இந்த சீரியலில் மூலமாக சித்துவுக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாக்கி விட்டனர்.
சித்து இப்போது ஷார்ட் பிலிம்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஸ்ரேயா பெரிதாக சீரியல்களில் நடிக்க தொடங்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தான் எந்த தம்பதி புது வீடு கட்டி இருந்தனர். அப்போது எமோஷனலாக போஸ்ட் போட்டிருந்தனர். புது வீட்டிற்குள் சென்ற நேரத்தில் ஸ்ரேயா கண்கழுங்கி அழுதிருந்தார்.
தங்களுடைய வாழ்க்கையில் இந்த தருணத்திற்காக பல வருடங்கள் காத்திருந்ததாகவும் இந்த மகிழ்ச்சிக்கு பின்னால் பல வலி இருப்பதாகவும் அந்த பதிவில் பகிர்ந்து இருந்தார். சோசியல் மீடியாவிலும் ஸ்ரேயா மற்றும் சித்து ஜோடி செம ஆக்டிவாக இருக்கின்றனர். அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் சர்ப்ரைஸ் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருப்பர்.
இவர்களுடைய பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு வைத்துக் கொண்டாடி வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். இந்த நிலையில் புது வீட்டுக்கு போன பிறகு ஸ்ரேயாவுக்கு பிறந்தநாள் வந்திருக்கிறது. அப்போது வீட்டிலேயே எளிமையாக ஃபங்ஷனை முடித்து இருக்கிறார்கள். அப்போதைய எடுத்த புகைப்படங்களை சீட்டு அதனுடைய மீடியாவில் பகிர்ந்து ஸ்ரேயாக்கு வாழ்த்து செல்வி சொல்லி இருக்கிறார்.
அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரேயா.. நீங்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவாகும் என்னை உண்மையிலே புரிந்து கொள்ளும் ஒரு நபராக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் நீங்கள் என் பக்கத்தில் இருந்தால் எல்லாம் இலகுவாக சமாளிக்க கூடியதாக உணர்கிறேன். நமக்கு வரும் பிரச்சனைகளை நாம் ஒன்றாக எதிர்கொள்கிறோம்.

ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்கிறோம். மேலும் ஒரு குழுவாகவும் வளர்ந்து வருகிறோம். அதுதான் நம்மை சிறப்பாக உணர செய்கிறது. உங்கள் பொறுமை உங்கள் தியாகங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் காட்டும் அமைதியான வலிமைக்கு நன்றி. நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
வரவிருக்கும் ஆண்டில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான அமைதி மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன். நான் உங்களுடன் எப்போதுமே துணையாக இருப்பேன் உங்களை எப்போதும் கவனித்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். நாம் ஒன்றாக கட்டமைக்க வாழ்க்கையைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். மேலும் உங்களை என் மனைவியாக பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் பொண்டாட்டி" என்று அந்த பதிவில் சித்து சொல்லி இருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications