பாண்டியன் ஸ்டோர் சீரியலின் அடுத்த சொதப்பல்.. இது நம்புற மாதிரியா இருக்கு? இது கூட கவனிக்கவில்லையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதை விறுவிறுப்புக்காக செய்த செயல் தற்போது சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சீரியல் கதையாக இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இப்படி எல்லாம் சொதப்பி வைத்திருக்கக் கூடாது என்று பலர் அறிவுரைகளையும் அள்ளித் தெளிக்கின்றனர்.
அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு குடும்ப ஒற்றுமைக்காக இப்போது உள்ள சூழ்நிலையிலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சீரியல் அடிக்கடி கலாய்க்கப்பட்டும் வருகிறது.
ஆனாலும் இந்த சீரியல் தொடர்ச்சியாக பல வருடங்களாக டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது இதுவே ஒரு பெரிய சாதனை தான். பல சீரியல்கள் ஆயிரம் எபிசோட்களுக்குப் பிறகு டிஆர்பியை தக்க வைத்துக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி டிஆர்பிஐ பெற்றிருந்ததோ அதேபோலவே இப்போதும் இருந்து வருகிறது.
ஆனாலும் சீரியலில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கதையில் சில மாற்றம் செய்வதால் அந்த மாதிரி தான் சில மாதங்களுக்கு முன்பு அனைவரும் ஹாலில் படுத்திருந்தாலும் அடுத்தடுத்து மூன்று மருமகள்கள் கர்ப்பமானார்கள். இது குறித்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஏன் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் கூட என்னது கதை இப்படி போகிறது என்று ஃபீல் பண்ணி இருப்பார்கள்.
அதைத்தொடர்ந்து கண்ணனால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. கண்ணன் வளைகாப்பு வைக்க போகிறேன் என்று சொன்னால், அங்கே கதிர் ஜெயிலுக்கு போய் விட்டார். இப்போது கண்ணனுக்கு குழந்தை பிறக்கும்போது கண்ணனே ஜெயிலுக்கு போய் விட்டார். இந்த நிலையில் இந்த சீரியலில் சில சொதப்பல்கள் நடைபெற்று இருக்கிறது. அதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ள எபிசோட்டில் கண்ணன் லஞ்சம் வாங்காமலேயே போலீசால் கைது செய்யப்படுகிறார். காரணம் அவருடைய டேபிளில் பணம் அவருக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் ஏற்கனவே கண்ணன் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை லஞ்சம் வாங்கி இருக்கிறார். அப்போதெல்லாம் மாட்டவில்லை.
ஆனால் தான் லஞ்சம் வாங்காத நேரத்தில் மாட்டி விட்டேன் என்று பீல் பண்ணுகிறார் கண்ணன். அதே நேரத்தில் தான் உண்மையில் லஞ்சம் வாங்கவில்லை என்பதை தன்னை விசாரிக்க வரும் போலீசாரிடம் அங்கு மாட்டி இருக்கும் சிசிடிவி புட்டேஜை செக் பண்ண சொன்னால் இவ்வளவு பிரச்சனைக்கே அங்கு இடம் இல்லை. அதை பேங்கில் வேலை பார்க்கும் கண்ணன் கூட மறந்து விட்டாரோ என்னவோ.
ஆனால் கண்ணனை காப்பாற்ற வேண்டும் என்று வீட்டில் இருந்து ஓடோடி வந்த கதிர் கண்ணனிடம் ரகசியமாக பேசும் போது அவர் நான் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறையில் லஞ்சம் வாங்கி இருக்கிறேன். இப்பதான் நான் வாங்கவில்லை என்று சொல்லி கதறிய போது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஆனால் அப்போது பேங்கில் இருக்கும் சிசிடிவியை யாரும் கவனிக்கவே இல்லை.
அதுபோல கண்ணன் பேங்கில் எந்த ஒரு பொசிஷனில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. சில நேரம் கலெக்ஷனுக்கு போகவில்லையா என்று மேலதிகாரி கண்ணனை திட்டுகிறார். அதே நேரத்தில் பேங்க் லோன் வேண்டும் என்றால் இவர்தான் அதற்கு கையெழுத்து போடும் முக்கியமான அதிகாரியாகவும் இருக்கிறார். இப்படி கூட எந்த பேங்கிலாவது அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று பல கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் மற்றும் மூர்த்திக்கு மட்டும்தான் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இப்போது உள்ள நிலவரப்படி மூன்று பேருக்கு பெண் குழந்தை பிறந்தாயிற்று. இன்னும் தனத்திற்கும் பெண் குழந்தை பிறந்தால் கன்ஃபார்மாக அவர் மரணம் அடைவது போலத்தான் கதையை முடிக்க போகிறார்கள்.
அடுத்த சீசனில் கதையை தொடங்குவதற்காக இப்போதைய சீசனில் இப்படி ஒரு இழுபிரியா என்று கேள்விகள் குவிந்து கொண்டிருக்கிறது. பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் சோதனைகள் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு வரப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications