இறுதி அத்தியாயத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கடைசி நேரத்தில் சாதனை.. அந்த சங்கதி தெரியுமா? செம
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விஜய் டிவியில் சில சாதனைகளையும் செய்திருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவது குறித்து ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது சீரியல் செய்த சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டே ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்பத்தில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், காதல், மோதல் பிரச்சனைகள் என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் கதை நகர்ந்து வருகிறது.
ஆனாலும் கதையின் அதிகமான பகுதிகள் வீட்டு முற்றத்தில் எல்லோரும் காபி குடிப்பது போன்று காட்சிகள் இருக்கும். ஆனாலும் இதுவும் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்தது தான். அதே நேரத்தில் இப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புது வீட்டிற்கு குடி பெயர்ந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சீரியல் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு வாரமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்து விடுவது வழக்கமாக நடந்து கொண்டிருப்பது தான்.
அதுவும் சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் எல்லோரும் ஹாலில் படுத்து தூங்கும் போதும் கூட வீட்டு மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பமாகி கதை நகர்ந்தது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. என்னமா இப்படி பண்ணுறீங்களே என்று பலர் நொந்து கொண்டும் இருந்தனர். ஆனாலும் சீரியலில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது என்று சொல்வது போல இவர்களுடைய கதை பல நேரங்களில் லாஜிக்கே இல்லாமல் உருண்டு கொண்டிருந்தது. ஆனாலும் இந்த சீரியலின் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அமோகமாக வரவேற்பு கொடுத்து வந்தனர்.
இப்போது குழந்தைகள் கூட்டு குடும்பம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு தான் மக்களுடைய வாழ்க்கை முறை இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் கிராமப்புறங்களிலாவது கூட்டு குடும்பத்தில் சிலர் இருப்பார்கள் ஆனால் இப்போது அங்கேயும் அப்படி எல்லாம் யாரும் கிடையாது. இப்போது கூட்டு குடும்பத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று கூகுளில் சர்ச் பண்ணி தான் தேட வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
எது எப்படியோ இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல சருக்கல்களையும், ஏற்ற தாழ்வுகளையும் பார்த்து வந்திருந்தாலும் இப்போது இந்த சீரியல் இதுவரைக்கும் விஜய் டிவியில் எந்த சீரியலும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறதாம். ஆமாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் விஜய் டிவியில் முதல் முறையாக 5 வருடம் நிறைவு செய்த சீரியலாம்.
அதுபோல டிஆர்பி யில் விஜய் டிவியில் முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் சீரியல் வரிசையில் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் விஜய் டிவியில் முதல் முறையாக ஆயிரம் எபிசோடுகளை இந்த சீரியல் கடந்து சாதனை படைத்திருக்கிறதாம். இப்படியாக இந்த சீரியல் பல சாதனைகள் படைத்திருக்கும் நிலையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலின் ரசிகர்கள் சீரியலின் சாதனைக்கு வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் சீரியல் முடிய போகிறது என்று வருத்தங்களையும் தெரிவிக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications