குழந்தையை கையில் வாங்கும் கதிர்.. கடன் பிரச்சனையால் அவமானப்படும் கண்ணன்.. மூர்த்தி எடுக்கும் முடிவு?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல போராட்டங்களுக்குப் பிறகு கதிர் தன்னுடைய குழந்தையை கையில் வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்.
முதல் முறையாக முல்லையும் தன்னுடைய குழந்தையோடு சந்தோஷமாக இருப்பதை பார்த்து முல்லையின் அம்மாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில் இனி கண்ணன் ஐஸ்வர்யா கடன் வாங்கி வைத்திருக்கும் பிரச்சனை வீட்டிற்கு தெரிய இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்த திருப்பம் நடைபெற தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கடன் வாங்கி வைத்து இருக்கும் நிலையில் இனி அந்த ரகசியம் வீட்டிற்கு தெரிய இருக்கிறது.
முல்லையும் கதிரும் மருத்துவமனைக்கு போகும் வழியில் ரத்தினம் வந்து பிரச்சனை செய்ததால் முல்லையின் வயிற்றில் பைக்கில் மோதியதால் அடிபட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த முல்லைக்கு இறுதியில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அனைவரும் இருக்கின்றனர்.
ஆனாலும் முல்லையின் இந்த நிலைமைக்கு ரத்தினம் தான் காரணம் என்று கடும் கோபத்தில் இருக்கும் கதிர் ரத்தினத்தை போட்டு அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்தபோது கடைசி நேரத்தில் ஜீவா வந்து அதை தடுத்து நிறுத்தி கதிரை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இப்போது எல்லோரும் மருத்துவமனையில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முல்லை மற்றும் கதிர் கையில் குழந்தை கொடுக்கப்படுகிறது.
குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக கதிர் மற்றும் முல்லை இருவரும் அதிகமான ஏக்கத்தில் இருந்த நிலையில் குழந்தை இருவருடைய கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்குகின்றனர். இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். இந்த நிலையில் முல்லையை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி கடன் வாங்கி கொடுத்த நபர்கள் வீட்டிற்கே வந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பிரச்சனை செய்ய அது தெரிந்து மூர்த்தி கடும் கோபமடைய இருக்கிறார். ஏற்கனவே வீட்டிற்குள் கண்ணனை சேர்க்கும் போது இவனால் இனி எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் மூர்த்தி என்ன முடிவெடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications