பாண்டியன் ஸ்டோர்ஸ் சொதப்பல்.. 7+3 கூட்டி கழிச்சு பாருங்க.. இப்படியா ரசிகர்களை ஏமாத்துவீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில சொதப்பல்கள் இருப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து கமெண்டுகளில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் முல்லைக்கு ஏழு மாதத்தில் குழந்தை பிறந்ததாக அந்த சீரியலில் பலமுறை கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் பல மாதங்களாக எப்படி ஏழு மாதத்திலேயே இருந்தது என்று ரசிகர்கள் இப்போது எபிசோடுகளை கணக்கு வைத்து கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

Pandian Stores serial Mullai gave birth to a child in seven months some other gossip on social media

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அடிக்கடி ட்விஸ்ட் என்கிற பெயரில் பல திருப்பங்கள் வருவது வாடிக்கைதான்.

அந்த மாதிரி தான் சமீபத்தில் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ரூமில் அனைவரும் படுத்து தூங்கினாலும் அடுத்தடுத்து மூன்று மருமகள்களும் கர்ப்பமானார்கள். அது குறித்து அதிகமான ட்ரோல் மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இதை சமாளிப்பதற்காகவே அதைத் தொடர்ந்து ஜீவா தன்னுடைய அண்ணன் தம்பிகள் தனக்கு செய்யும் செயலைப் பார்த்து கடுப்பாகி வீட்டை விட்டு கிளம்பி இருந்தார்.

அந்த எபிசோடுகள் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அனைவருடைய அனுதாபத்தையும் ஜீவா பெற்றுவிட்டார். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடந்த சில குளறுபடிகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவது இந்த சீரியலில் ஜீவா வீட்டை விட்டு போன பிறகு சில வாரங்கள் கழித்து முல்லைக்கு அவருடைய அம்மா வளைகாப்பு நடத்த வேண்டும் என்று கூறுவார்.

அதாவது பார்வதியும் தனமும் பேசிக் கொண்டிருக்கும் போது அடுத்த வாரமே முல்லைக்கு ஏழாவது மாதம் தொடங்கிவிடும் என்று தனம் சொன்ன எபிசோடு 11ஆம் தேதி ஏப்ரல் 2023.. அதைத்தொடர்ந்து முல்லையின் வளைகாப்பு 21 ஏப்ரல் 2023 நடைபெற்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கதிரும் முல்லையும் மருத்துவமனைக்கு போகும்போது ரத்தினம் முல்லையின் வயிற்றில் பைக்கால் மோதியதால் முல்லை தரையில் கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடும்.

Pandian Stores serial Mullai gave birth to a child in seven months some other gossip on social media

அப்போது முல்லையை மருத்துவமனையில் சேர்க்க, டாக்டர் அவருக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்போது தனம் ஐயோ டாக்டர் இப்போ முல்லைக்கு 7 மாசம் தானே ஆகுது இப்போ குழந்தை எடுத்தால் சரியா வருமா என்று கேட்கிறார். இதுதான் தற்போது கேள்விக்கு உள்ளாகி வருகிறது. அதாவது அந்த எபிசோடு ஒளிபரப்பான தேதி 14 ஜூன் 2023.

இந்த நிலையில் இத்தனை மாதங்களைக் கடந்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மட்டும் ஏழு மாதத்தை தாண்டவில்லையே..! அது எப்படி? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வர, இதற்கே இப்படி என்றால் இப்போது தனம் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதை வீட்டில் சொல்லாமல் வேற மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதை இன்னும் எத்தனை மாதங்கள் கொண்டு போகப் போகிறார்களோ என்றும் இப்போது கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+