மூர்த்தியிடம் இருந்து தப்பிய பிரசாந்த்.. ஜீவாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி.. எதிர்பாரா கடைசி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் அக்டோபர் ஏழாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தது பிரசாந்த் தான் என்ற உண்மை அவர் வாயாலே அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் பிரசாந்தை மூர்த்தி பிடித்து வைத்திருந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோட்டில் ஆரம்பத்தில் பிரசாந்தை கையும் களவுமாக பிடித்த மூர்த்தி குடும்பத்தினர் பிரசாந்தை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதோடு ஐஸ்வர்யா இவன் வாயாலேயே உண்மையெல்லாம் ஒத்துக்கொண்டது பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோவை நாம போலீஸிடம் கொண்டு கொடுக்கலாம் என்று சொல்ல பிரசாந்த் அதிர்ச்சி ஆகிறார்.
அதற்கு மீனா இவனை போலீசில் ஒப்படைக்க வேண்டாம். என் கையாலேயே நானே கொன்னுருவேன். இவனை எங்க அப்பா எவ்வளவு நம்பினாங்க? இவனுக்காக என்னவெல்லாம் செஞ்சாங்க? ஆனா கடைசி எங்க அப்பாவே கொல்ல பார்த்து இருக்கான். கொலைகாரன் என்று பிரசாந்தை மீனா அடிக்க எல்லோரும் மீனாவை சமாதானப்படுத்துகின்றனர். அந்த நேரத்தில் பிரசாந்த் மூர்த்தியை தள்ளிவிட்டு ஹாஸ்பிடலில் இருந்து ஓடி விடுகிறார்.
அதைத்தொடர்ந்து இவன் ஓடிப் போனால் போகட்டும் நாம போலீஸ் ஸ்டேஷனில் போய் இவனை பற்றி சொல்லணும் என்று எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகின்றனர். அங்கு போலீஸ் ஆபீஸரிடம் பிரசாந்த் பேசிய ஆதாரத்தை காட்ட, அதற்கு அவர்கள் இந்த ஒரு ஆதாரத்தை வச்சு கதிர், ஜீவாவை வெளியே கொண்டு வர முடியாது. நாங்க இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுக்குறோம். நீங்க கோர்ட்டில் போய் பாருங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
அதை தொடர்ந்து வக்கீலிடம் இந்த ஆதாரத்தைக் கொண்டு காட்ட அவர் இந்த ஒரு ஆதாரம் போதும் நான் இன்று கதிர், ஜீவாவை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று சொல்லி நீதிமன்றத்தில் வாதாடுகிறார். அப்போது நீதிபதி இடம் இந்த ஆதாரத்தை காட்ட இதை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு கதிர் ஜீவாவை வெளியே விட முடியாது. அதே நேரத்தில் பிரசாந்தை கைது செய்கிற வரைக்கும் கதிர், ஜீவா ஜெயிலிலே இருக்கட்டும் என்று தீர்ப்பு சொல்லிவிட அதைக் கேட்டு மீனா கதறி அழுது கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பிரசாந்த் மல்லி வீட்டுக்கு சென்று அவசர அவசரமாக என்னை யாராவது தேடி வந்தார்களா? என்று கேட்க, அதற்கு மல்லி இல்லை நீ எதற்காக ஹாஸ்பிடலில் இருந்து இப்படி வந்திருக்கா? சொல்லியிருந்தா நானே கூப்பிட வந்திருப்பேனே என்று பேசிக் கொண்டிருக்க, அதற்கு பிரசாந்த் சமாளித்தபடி பேக்கில் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்ப ரெடி ஆகிறார்.
அதற்கு மல்லி கேள்வி மேல் கேள்வி கேட்க மல்லியிடம் பிரசாந்த் கோபத்தை காட்டுகிறார். அந்த நேரத்தில் இரண்டு போலீஸ் வந்து பிரசாந்தை கைது செய்து ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தது மேனேஜரை கொலை செய்தது எல்லாமே பிரசாந்த் தான் என்று சொல்கின்றனர். அதைக் கேட்டு மல்லி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications