பாண்டியன் ஸ்டோரில் எதிர்பாராத முடிவு.. மூர்த்தி சொன்ன வார்த்தையால் கதி கலங்கும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குடும்பத்திற்கு நல்லது செய்ததாக நினைத்து மூர்த்தி செய்த செயல் கடைசியில் அவருக்கே கஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

மூர்த்தி சொன்ன புது முடிவைப் பார்த்து மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு கேன்சர் இருப்பது தெரிய வந்ததும் முதலில் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து தனத்தை நல்ல முறையில் பார்த்து வருகின்றனர். இப்போது தனத்திற்கு ஆபரேஷன் செய்து முடித்து வீட்டிற்கு மீண்டும் நல்லபடியாக திரும்பி வந்து இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மூர்த்தி இருக்கும் வெயிலை சமாளிப்பதற்காக எல்லா ரூமிலும் ஏசி வாங்கி மாட்டிறலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல, அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சியாகின்றனர். அப்போது ஜீவா அண்ணே ரொம்ப செலவாகும் யோசிச்சுக்கோங்க என்று சொல்ல, அதற்கு மூர்த்தி எல்லா விஷயத்திலும் கணக்கு பார்த்துகிட்டு இருந்தா முடியுமா? என்று சொல்ல கண்ணன் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து மூர்த்தி, "கதிர் எல்லா ரூம்லையும் இன்னைக்கு ஏசி வாங்கி மாட்டிரு என்று சொல்ல, வீட்டிற்கு நான்கு ஏசி வந்து விடுகிறது. அதை பார்த்த மீனா என்னது இத்தனை ஏசியா? என் கண்ணாலே இதை நம்ப முடியலையே மாமா? என்று சொல்ல, அதற்கு முத்தி ஏங் கதிரு இன்னைக்கே எல்லா ஏசியையும் மாட்டிரலாமா? என்று கேட்க, பிறகு எல்லார் ரூமிலும் மாட்டப்படுகிறது. அப்போது எல்லோரும் தங்களுடைய அறையில் சந்தோஷமாக ஏசியில் இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து கரண்ட் பில் வருகிறது. அதை எடுத்துக்கொண்டு கதிர் அன்னை கரண்ட் பில் வந்திருக்கிறது என்று சொல்லி கொடுக்க, அதை பார்த்து மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். ஐயையோ தனம் 28000 தனம் என்று மூர்த்தி அதிர்ச்சி அடைந்து இனிமே எல்லாரும் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல யாரும் ஏசி போடக்கூடாது. அப்படி தான் சொல்லுவேன் என்று சொல்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று செய்திகள் ஏற்கனவே பரவி வரும் நிலையில் ஒருவேளை வீட்டில் ஏசி வாங்கி மாட்டி இருப்பதால் இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு ஏசி வெடித்து யாருக்கேனும் ஏதாவது ஆவது போன்று சொல்லி, சீரியலை முடித்து விடுவார்களா? அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications