ஐஸ்வர்யா செய்த பிரச்சனையால் கடும் கோபத்தில் கதிர்.. ஜீவா கேட்ட வார்த்தை.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோரில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
பல மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த முக்கியமான திருப்பம் இன்றைய எபிசோட்டில் வந்திருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கேன்சர் குறித்து வெளியிட்ட வீடியோவை மீனாவின் அம்மாவும் அப்பாவும் பார்த்து பதறிப் போய்க் கொண்டிருக்கின்றனர். மீனாவின் அம்மா ஒருவேளை நம்ம மீனாவுக்கு கேன்சராக இருக்குமோ என்று புலம்பி கொண்டு இருக்கின்றார். அப்படியெல்லாம் இருக்காது என்று ஜனார்த்தனன் சமாதானம் செய்தாலும் மீனாவின் அம்மா கேட்காமல் அவா அந்த வீட்டுக்கு போனதால அவளுக்கு தான் ஏதோ ஆகிட்டு என்று கோபத்தோடு சண்டையிட்டு நான் மீனா வீட்டுக்கு போறேன் வாரீங்களா? இல்லையா? என்று கிளம்பி போகிறார்.
அதைத்தொடர்ந்து கதிர் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஜீவாவும் முல்லையின் அம்மாவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு யாருக்கு கேன்சராக இருக்கும் என்று யோசித்து முல்லையின் அப்பா ஒருவேளை முல்லைக்காக இருக்குமோ என்று கேள்வி கேட்க, அதைத் தொடர்ந்து ஜீவா ஏற்கனவே மீனா பேசிய வார்த்தைகளை எல்லாம் யோசித்துப் பார்த்து மீனாவுக்கு கேன்சராக இருக்குமோ என்று அவரும் அதிர்ச்சி அடைந்து முல்லையின் அப்பாவிடம் மீனா தான் ரொம்ப நாளா? ஒரு மாதிரி இருக்கா ஒருவேளை அவளுக்கு ஏதாவது இருக்குமோ என்று பதறியபடி சொல்ல, முல்லையின் அப்பா என்ன ஆச்சுன்னு தெரியலையே நாம போய் வீட்ல பார்ப்போம் என்று கிளம்புகிறேன்.

அதைத்தொடர்ந்து ஹாஸ்பிடலில் இருந்து மீனா, முல்லை, தனம், கதிர் நான்கு பேரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது மீனா நல்ல பாட்டா போடுங்க கதிர் என்று சொல்ல பிறகு நானே போடுகிறேன் என்று மீனா போனை எடுத்துப் பார்க்கும்போது கண்ணன் ஐஸ்வர்யா சேனலில் இருந்து நோட்டிபிகேஷன் வருகிறது. இவா என்ன வீடியோ போட்டு இருக்கா என்று பார்ப்போமே என்று அந்த வீடியோவை பிளே செய்து பார்க்க ஐஸ்வர்யா தனத்தை பற்றி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இதுக்காகத்தான் நீங்க போங்க நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன் என்று இவா நம்மளை அனுப்பி வைத்தாளா? என்று தனம் கோபப்பட, இந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? இனி நீங்க திட்டும் போது நான் எதுவுமே சொல்ல மாட்டேன் என்று கதிரும் கூறிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து மூர்த்தி அங்கிருக்கும் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு தனத்தின் அண்ணன் வந்து வீட்டில் என்ன நடக்குது சொல்லுங்க? நான் உங்ககிட்ட நண்பனாக தானே பழகி இருக்கேன் என்று கோபப்படுகிறார்.
அதற்கு மூர்த்தி வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லையே என்று சொல்ல, இல்லை ஐஸ்வர்யா வீட்டில் ஒருவருக்கு கேன்சர் இருக்குன்னு சொல்லி வீடியோ போட்டு இருக்கு என்று சொல்லி வீடியோவை காட்ட மூர்த்தி அதிர்ச்சியாகி அவரும் தனம் புது வீடு கட்ட வேண்டும் என்று சொன்னது, அதற்கு பிறகு நடந்து கொண்ட விதம் குறித்து நினைத்து பார்த்து தனத்திற்கு தான் ஏதாவது ஆகி இருக்குமோ என்று பதறி வீட்டிற்கு கிளம்பி போகிறார்.

அடுத்ததாக எல்லோரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். வீட்டில் ஐஸ்வர்யாவிடம் மூர்த்தி மீனாவின் குடும்பம் தனத்தின் குடும்பம் என ரவுண்டு கட்டி எல்லோரும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு காரில் வந்து கொண்டு இருந்தவர்களும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். வீட்டு வாசலில் நின்று மீனா தன்னுடைய அப்பா கார் வந்திருப்பதை பார்த்து எதற்காக வந்திருப்பாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு பிறகு ஏதோ சண்டை போடறதுக்காக வந்திருப்பாரோ என்று யோசித்து வீட்டிற்குள் வருகின்றனர்.
பிறகு எல்லோரும் ஐஸ்வர்யாவிடம் எதுக்காக இப்படி வீடியோ போட்ட? என்று மிரட்டிக் கொண்டு இருக்க, கண்ணன் எதுவும் தெரியாமல் என்ன ஆச்சு எல்லாரும் என்ன கேள்வி கேக்குறீங்க என்று கேட்க, ஐஸ்வர்யாவின் சித்தி கண்ணனை திட்டுகிறார், நீ எல்லாம் எதற்கு புருஷனா இருக்கா? ஒரு பொண்டாட்டி என்ன செய்தா, ஏது செய்தா என்று கூட உனக்கு தெரியாதா? என்று கேட்க கண்ணன் அதிர்ச்சியாகி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications